ஆக்ராவில் ஆட்டை அடித்ததால் ஏற்பட்ட தகராறில் தந்தை மகன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே பீகாராம் சிங் என்பவரது ஆடு ஒன்று கியானி என்பவரின் வீட்டுக்குள் நுழைந்துள்ளது. இதில் கியானியின் வீட்டுக்குள் நுழைந்த ஆட்டை கட்டையால் அடித்தும், காலை உடைத்தும் யாரோ துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆட்டின் உரிமையாளர் பீகம் சிங்குக்கு கடும் கோபம் ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கியானி, தனது கைத்துப்பாக்கியால் பீகம் சிங் மற்றும் அவரது 20 வயது மகன் ஜிதேந்திராவை சுட்டுக் கொன்றுள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் கிராமத்துக்குள் வருவதற்குள் குற்றவாளிகள் தலைமறைவாகி உள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகி உள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து சௌனி காவல்நிலைய அதிகாரிகள் கூறுகையில், இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் வெள்ளிக்கிழமை நிகழ்ந்ததாகவும், சம்பந்தப்பட்ட குற்றவாளி தலைமறைவாகிவிட்டதகாவும் தெரிவித்துள்ளனர்.