states

img

உத்திரபிரதேசத்தில் 28 வயது கர்ப்பிணிப் பெண் கொலை

உத்திரபிரதேச மாநிலத்தில் 28 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உத்திரபிரதேசம் மாநிலம் சித்ரகூட் பகுதியில் உள்ள கஜூரிஹா கலா கிராமத்தில் இன்று காலை 28 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 4 மாத கர்ப்பிணியாக இருந்த அந்த பெண் இன்று அவரது வீட்டில் ஒரு அறையில் உள்ள கட்டிலில் சடலமாக இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அவரது கணவர் அருகில் உள்ள எஸ்.எச்.ஓ. ராய்புரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரில் அந்த பகுதியில் இருந்த ஒரு இளைஞர் மீது புகார் கூறியுள்ளார். இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.