states

img

பாஜக மேலிட பொறுப்பாளரை சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏ  பதவி பறிப்பு....

புதுச்சேரி:
பாஜக மேலிட பார்வையாளரை சந்தித்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஜான் குமாரின் கட்சிப் பதவி பறிக்கப்பட் டுள்ளது.சட்டப்பேரவை தேர்தலுக்குத் தயாராகி வரும் காங்கிரஸ் கட்சி புதுச்சேரியில் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வட்டார காங்கிரஸ் கட்சிப் பதவியை இரண்டாகப் பிரித்து நிர்வாகிகளை நியமித்துவருகிறது. அதன்படி, முதலியார்பேட்டை வட்டார காங்கிரஸ் கட்சி வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டு தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவராக குமார், வடக்கு வட்டாரத் தலைவராக ஜெகவீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.முதலியார்பேட்டை வட்டார காங்கிரஸ் பிரதேச உறுப்பினராக இருந்த ஜான் குமார் எம்எல்ஏவிற்கு எந்தப் பதவியும் அளிக்கப் படவில்லை. அவர் பாஜக மேலிடப் பார்வையாளரை கடந்த சில நாள்களுக்கு முன்பு சந்தித்ததைத் தொடர்ந்து அவருடைய பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

;