states

img

ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்து-2 பேர் உயிரிழப்பு

அருணாசலப் பிரதேசத்தில் அப்பர் சியாங் பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 2 வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில், இதுவரை இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் மொத்தம் 5 பேர் பயணம் செய்துள்ளனர். விபத்துக்குள்ளான இடம் சாலை வழியாக தொடர்பு கொள்ள முடியாத நிலையில், மீட்புப் படையினர் வனப்பகுதிக்குள் நடந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

;