states

img

விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் - திக்ரி எல்லை மூடல் 

விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகிறார். தொடர்ந்து கூட்டத்தை கலைப்பதற்காக திக்ரி எல்லையை காவல்துறையினர் மூடியுள்ளனர்.

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் பல வடிவங்களில் போராடி வருகிறார்கள். அவர்களை தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு வகையில் தடுக்க முயற்சி செய்து வருகிறார்கள். கடந்த ஒரு வாரமாக தீவிரமடைந்த விவசாயிகள் போராட்டத்தை காவல்துறையினர் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்காமல் இருந்த அந்தந்த மாநில எல்லைகளில் தடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்தாமல் இருக்க டெல்லியில் உள்ள திக்ரி மாவட்ட எல்லையை காவல்துறையினர் மூடியுள்ளனர். 

ஏற்கனவே, ஹரியானா மாநிலத்தில் நுழைவதற்கான எல்லைகளை அடைத்துள்ளனர். தற்போது  மீண்டும் எல்லைகளை மூட துவங்கியுள்ளனர். விவசாயிகள் எங்கும் செல்ல அனுமதியில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் டெல்லி ஹரியானா எல்லையில் காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து டெல்லி சாலையை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

கிசான் யூனியன் அம்ரிஸ்டாரின் விவசாயிகள், மத்திய அரசு அவர்களின் பிரச்சினைகளை உண்மையிலேயே கேட்க விரும்பினால், அவர்கள் சிங்கு எல்லையில் உள்ள விவசாயிகளைப் நேரில் சந்திக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டெல்லி சாலோ போராட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள்.
 

;