states

img

ஹரியானா உள்ளாட்சி தேர்தலில் பாஜக -ஜேஜேபி கூட்டணிக்கு அடி... 3 மாநகராட்சிகளில் இரண்டில் படுதோல்வி....

சண்டிகர்:
ஹரியானாவின் அம்பாலா, பஞ்ச் குலா,சோனிபட் மாநகராட்சிகளுக்கும் ரேவாரி மாவட்டத்திலுள்ள ரேவாரி, தாருஹேரோ, ரோஹ்தக் மாவட்டத்திலுள்ள சம்ப்லா மற்றும் ஹிசார் மாவட்டத்திலுள்ள உக்லானாநகராட்சிகளுக்கு கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், பஞ்ச்குலா மாநகராட்சியிலும், ரேவாரி நகராட்சியிலும் மட்டும் தப்பிப்பிழைத்த பாஜக - ஜேஜேபி கூட்டணி, ஏனைய அனைத்து இடங்களிலும் பலத்த அடி வாங்கியுள்ளது.பஞ்ச் குலா மாநகராட்சியில் நோட்டாவுக்கு மட்டும் 1,333 வாக்குகள் கிடைத்த நிலையில், இங்கு பாஜக மேயர் வேட்பாளராக போட்டியிட்ட குல்பூஷன் கோயல், வெறும்2 ஆயிரத்து 57 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளார். இங்கு காங்கிரஸ் வேட்பாளர் உபீந்தர் கெளர் அலுவாலியாஇரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆனால், ஏனைய 2 மாநகராட்சிகளிலும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் பாஜக தோற்றுள்ளது.அம்பாலா மாநகராட்சி மேயர் தேர்தலில், பாஜக சார்பில் வந்தனா சர்மா போட்டியிட்ட நிலையில், அவரை, ஹரியானா ஜான் செட்னா (எச்ஜேசிபி) கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சர் வினோத் சர்மாவின் மனைவியுமான சக்தி ராணி 8,084 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.இதேபோல சோனிபட் மாநகராட்சி மேயர்பதவியை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. இங்கு காங்கிரஸ் வேட்பாளர் நிகில் மதன்,பாஜகவின் லலித் பாத்ராவை 13 ஆயிரத்து 818 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். நகராட்சிகளைக் பொறுத்தவரை, ரேவாரி நகராட்சிக்கான தேர்தலில் மட்டும்வென்ற பாஜக, சம்ப்லா, தாருஹேரா, உக்லானா நகராட்சிகளில் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த 3 நகராட்சிகளையும் சுயேட்சைகளிடம் அக்கட்சி பறிகொடுத்துள்ளது.

இவ்வளவுக்கும் உக்லானா, சம்ப்லா, தாருஷேரா, பாஜக-வின் கூட்டணிக் கட்சியான ஜனநாயக ஜனதா கட்சியின் (ஜேஜேபி)கோட்டைகள் என்று கூறப்படும் இடங்களாகும். அப்படியிருந்தும் பாஜக-வுக்கு இங்கு பலத்த அடி விழுந்துள்ளது.

;