science

img

சென்னையில் தயாரான மின்சார கார்: முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை,ஜூலை 24- முழுக்க முழுக்க இந்தியா வில் தயாரிக்கப்பட்ட முதல் மின்  சார (பேட்டரி) காரான ஹூண்  டாய் நிறுவனத்தின் ‘கோனா’வை  முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி அறிமுகம் செய்து வைத்தார்.   சென்னையில் கடந்த ஜன வரி மாதம் நடைபெற்ற உலக முத லீட்டாளர் மாநாட்டில், மின்சாரக் கார் உற்பத்திக்காக தமிழகத்தில் ரூ. 7 ஆயிரம் கோடியை ஹூண்  டாய் நிறுவனம் முதலீடு செய்வ தாக ஒப்பந்தம் செய்து கொண் டது. அதன்படி திருப்பெரும்பு தூரில் உள்ள அந்நிறுவனத்தின் ஆலையில், கோனா என்ற மின்சாரக் காரின் உற்பத்தி தொடங்கியது. முழுக்க முழுக்க இந்தியாவி லேயே தயாரிக்கப்பட்ட முதல்  மின் சாரக் கார் என்ற பெருமை யுடன் தற்போது களத்தில் இறங்கி  யுள்ளது கோனா. இந்தக் காரை,  முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி, தலைமைச் செயலகத்தில் புதனன்று(ஜூலை24) அறிமுகம்  செய்து வைத்தார். கோனா மின்சாரக் காரின் ஓட்டத்தை கொடி  அசைத்து தொடங்கி வைத்த  அவர், பின்னர் காரில் பய ணித்தார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் காரில்  பயணம் செய்தனர். வரிகளுக்கு முந்தைய காரின்  ஷோரூம் விலை ரூ. 25 லட்சம்.  ஆன்ரோடு விலை ரூ. 30 லட்சம் என  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 39.2 கிலோ வாட் திறன் கொண்ட  லித்தியம் அயன் மின்சேமிப்பான், காரின் அடிப்பகுதியில் பொருத் தப்பட்டுள்ளது. காரின் முகப்பு விளக்கு அருகே சார்ஜிங் பாயிண்ட் உள்ளது. நார்மல் மற்றும் ஃபாஸ்ட் ஆகிய இரு வழி களில் மின்னேற்றம் செய்ய முடி யும். நார்மல் என்ற பயன்முறை யில், முழு மின்னேற்றம் செய்ய 19 மணி நேரம் செலவாகும். ஃபாஸ்ட் பயன்முறையில் 5 முதல் 6 மணி நேரத்திற்குள்ளாக சார்ஜ் செய்து விட முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 452 கிலோ மீட்டர் தூரம் வரை  கோனா கார் செல்லும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. கோனா காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு  152 கிலோ மீட்டராகும். 9.7 விநாடி களில் 100 கிலோ மீட்டர் வேகத் தைத் கோனா கார் எட்டி விடும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

;