science

img

நீர் மாசும் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு கிருமிகளும்

ஒப்பனைப் பொருட்களும் மருந்துக் கழிவுகளும் நகர்ப்புற நீர்நிலைகளை மாசுபடுத்துவதோடு கிருமிகள் மருந்து எதிர்ப்பு சக்தி அடைவதற்கும் காரணமாகிறது என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.கவுஹாத்தி நகரிலுள்ள நீர்நிலைகளின் மாசுத்தன்மைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டபோது பிரமபுத்ரா நதியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் வைரஸ் கிருமிகளும் பல மருந்து எதிர்ப்பு குணமுடைய எஷரஸ் கோலி(Escherichia coli) யும் காணப்பட்டது. சில நுண்கிருமிகள் லெவோஃப்ளாக்சிசின், சிப்ரோஃப்ளாக்சிசின்,நோர்ஃப்ளாக்சிசின்,கானாமைசின் மானோசல்பேட்,சல்பாமீத்தாக்கசசோல் போன்ற முக்கிய ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கும் நூறு சதவீத எதிர்ப்பு சக்தியைக் கொண்டதாக உள்ளது என்று தெரியவந்துள்ளது.  நச்சுத் தன்மை கொண்ட உலோகங்களான ஆர்சினிக்,கோபால்ட்,மாங்கனீஸ் போன்ற மாசுகளுக்கும் நீரின் அமிலத் தன்மைக்கும் தொடர்பு உள்ளது என்றும் அதேபோல்  ஈ.கோலி கிருமியில் மருந்து எதிர்ப்பு சக்தியை தூண்டுகின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே விஞ்ஞானிகளும் கொள்கைமுடிவெடுப்பவர்களும் மருத்துவர்களும் ஆண்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்துவதையும் அவைகளை கழிவாக நீக்குவதையும் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.நீர் நிலைகளின் மாசு தாங்கும் சக்தியை கண்டறியவும் அவற்றின் தரக்கட்டுப்பாடுகளை மீளாய்வு செய்யவும்  புதிய அளவீடுகளை அறிமுகப்படுத்தவேண்டும் என்கிறார் காந்தி நகர் ஐ ஐ டியை சேர்ந்தவரும் இந்த ஆய்வை முன் நடத்தியவருமான மனிஷ் குமார்.  (தி ஒயர் இதழில் சங்கமித்ரா தியோபஞ் கட்டுரையின் சுருக்கம்) 

;