science

img

உணவுகளை ட்ரோன் மூலம் டெலிவரி செய்ய ஜோமாட்டோ நிறுவனம் முயற்சி!

உணவுகளை ட்ரோன் மூலம் டெலிவரி செய்ய ஜோமாட்டோ நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது.

ஆன்லைனில் ஆர்டர் மூலம் உணவுகளை வீட்டிற்கு டெலிவரி செய்யும் சேவை ஜோமாட்டோ நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றது. அதில் ஒரு பங்காக தற்போது, ட்ரோன் மூலம் உணவு டெலிவரி செய்ய, லக்னோவைச் சேர்ந்த டெக் ஈகிள் (Tech Eagle) என்ற தனியார் தொழில் நுட்ப  நிறுவனத்துடன், ஜோமாட்டோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. 

இந்நிலையில், இந்த தொழில்நுட்ப நிறுவனம், 5 கிலோ வரையில் உணவு பொட்டலங்களை கொண்டு செல்லும் வகையில் ட்ரோன் உருவாக்க ஒப்பு கொண்டுள்ளது.இந்த ட்ரோன் தற்போது சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த ட்ரோன், நான்கு ரோட்டார்கள் கொண்டது. மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. (கிட்டத்தட்ட ஒரு 150 சிசி பைக் போல). 5 கிலோ உணவு எடையைத் தாங்கும். 

இது 5 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 10 நிமிடங்களில் கடந்துவிடும். மேலும் ட்ரோன் சிக்னல்களுக்காக மல்டி ரவுட்டர் பயன்படுத்தி உணவுப் பார்சல்களை டெலிவரி செய்யப்படும். இதில் சென்சார் இணைக்கப்பட்டுள்ளதால், எதிரே பறவைகள் வந்தால் அதனை கணித்து ஒதுங்கி வழிவிடும்.

;