science

img

செயற்கைக்கோள் செலுத்த மாணவர்களுக்கு பயிற்சி

பெரம்பலூர், ஜூலை 27- பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெரம்பலூர் வந்திருந்த இஸ்ரோ விஞ்ஞானியும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை செய்தி யாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், வானிலை அறிக்கையை முன்கூட்டியே அறிவித்தா லும் அவற்றில் மாறுபாடு நிகழ்வதும், அறிவிப்பு பொய்த்துப் போவதும் உண்டு.

இயற்கை எப்போதும் அட்ட வணைப்படி இயங்காது. அது தன்போக்குக்கு செயல்படும். அதனால் தான் வானிலை அறிவிப்பு அவ்வப் போது மாறிப் போவது நிகழ்கிறது. இயற்கை நம்மை வஞ்சித்தாலும், அதை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். நீர் மேலாண்மை திட்டங் களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறைந்த அளவு தண்ணீ ரைக் கொண்டு அதிக மகசூல் பெறும் விவசாய நீர் மேலாண்மைத் திட்டங் களை பின்பற்ற வேண்டும். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு செயற்கைகோள் விண்ணில் செலுத்தும் பயிற்சியை வரும் ஆகஸ்ட் 11ம் தேதி அளிக்க திட்டமிட்டுள்ளோம். ஆகஸ்ட் மாதம் முதல்கட்டமாக இப்பயிற்சி தொடங்க உள்ளது. மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சிறிய அளவிலான செயற்கைகோளை ராட்சத பலூன் மூலம் சுமார் 15 கி.மீ உயரத்துக்கு விண்ணில் செலுத்தியும் செயற்கை கோள் செயல்பாட்டையும், அது  அனுப்பும் படம் மற்றும் சமிக்ஞை களை தரையில் உள்ள கட்டுப் பாட்டு அறையிலிருந்து கண்காணிக்க வும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப் படும்.

இந்த பயிற்சியின் மூலம், அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்காலத்தில் விண்வெளி திட்டங்களில் இஸ்ரோ வுடன் இணைந்து செயல்பட உத்வேகம் கிடைக்கும். சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர் ரவுடியிசம் செய்வது வேதனைக்குறியது. அவர்களாக திருந்த முயற்சிக்காதவரை அவர்களை  திருத்தும் முயற்சி அவ்வளவாக பல னளிக்காது. அதே சமயம் எதிர்மறை யான நபர்களை மையப்படுத்தி வெளிவரும் திரைப்படங்களை பார்த்து இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதாக தோன்று கிறது.  திரைப்படம் மற்றும் ஊடகங்கள் எதிர்மறையான கருத்துக்களை வெளிப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.  பேட்டியின் போது தனலட்சுமி சீனிவாசன் குழும தலைவர் சீனிவாசன் உடனிருந்தார்.

;