science

img

ஜி.எஸ்.எல்.வி எப்-10 ஏவுகணை இலக்கை எட்டவில்லை - இஸ்ரோ தகவல் 

ஜி.எஸ்.எல்.வி எப்-10 ஏவுகணை இலக்கை எட்டவில்லை - இஸ்ரோ தகவல் 

 

ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்( இஸ்ரோ) பூமி கண்காணிப்புக்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்.03 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்தது.இந்த செயற்கைக்கோளை "ஜி.எஸ்.எல்.வி எப்-10" என்ற ஏவுகணையில் பொருத்தி இன்று (வியாழக்கிழமை) காலை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்திலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது. இந்த ஏவுகணை விண்ணுக்கு ஏவப்படுவதற்கு முன் 14 மணி நேர கவுண்டவுன் நேற்று பிற்பகல் 3.43 மணிக்குத் தொடங்கியது.  இஸ்ரோ விஞ்ஞானிகளும் ஏவுகணையையும் செயற்கைக்கோளையும் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். இதன்படி, கவுண்டவுன் முடிந்து இன்று காலை "ஜி.எஸ்.எல்.வி எப்-10"  ஏவுகணை விண்ணில் பாய்ந்தது. ஆனால், ஏவுகணையில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறால் இந்த திட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

;