science

img

மிகச்சிறிய அளவிலான கருந்துளை கண்டுபிடிப்பு

ஓகியோ, நவ.5- சூரியனைப் போன்று வெறும் 3.3 மடங்கு மட்டுமே நிறை யுடன் கூடிய புதிய கருந்துளையைக் கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட திலேயே இது தான் மிகச்சிறியது எனத் தெரிவித்துள்ளனர். உருவில் பெரிய நட்சத்திரமானது தனது ஆற்றலை இழந்து உருக்குலைந்து வெடித்துச் சிதறும் போது அதீத ஈர்ப்பு விசை யைக் கொண்ட கருந்துளையாக மாறுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதேவேளையில் வெடித்துச் சிதறும் போது நியூட்ரான் நட்சத்திரங்களாவதாகவும் அவர்கள் குறிப்பிடு கின்றனர். ஆனால் இந்த நியூட்ரான் நட்சத்திரங்கள் சூரியனு டன் ஒப்பிடுகையில் 2 முதல் 3 மடங்கு மட்டுமே அளவில் பெரியதாக இருக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சூரியனுடன் ஒப்பிடுகையில் 4000 கோடி மடங்கு பெரியது தொடங்கி குறைந்தது 5 முதல் 15 மடங்கு பெரிய கருந்துளை களை இதுவரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில், சூரியனை விட 3.3 மடங்கு மட்டுமே அளவில் பெரிய கருந்துளையை அமெரிக்காவின் ஓகியோ மாநிலப் பல்க லைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. இதற்கு முன் சூரியனை விட 3.8 மடங்கு பெரிய கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. நியூட்ரான் நட்சத்திரத்திற்கு இவ்வளவு பெரிய நிறை இல்லாத போது, இந்த சிறிய கருந்துளை உண்டானது எப்படி என விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தக் கேள்வியானது நட்சத்திரங்களின் வாழ்க்கைச் சுழற்சி பற்றிய மறுவரையறைக்கு வழி வகுத்திருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 

;