science

img

பூமியின் 2 வது சுற்று வட்டப்பாதைக்கு மாறியது சந்திரயான் 2  விண்கலம்

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுமதிக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் பூமியின் 2வது சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது என்ற இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் நோக்கில் இஸ்ரோ சந்திரயான் 2 எனும் விண்கலத்தை தயாரித்து திங்களன்று மார்க் 3 ராக்கெட் மூலம் அனுப்பியது. ரூ374 கோடி செலவில்  தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஐந்தாம் தலைமுறை ராக்கெட் ஆகும் இதில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 13 கருவிகள் சந்திரயான் 2 விண்கலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெற்றிகரமாக ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் தற்போது பூமியின் 2வது சுற்று வட்டப்பாதைக்கு மாறி உள்ளது என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
 

;