science

img

விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களை கண்டுபிடிக்க உதவிய தமிழக இளைஞர்!

நிலவின் தென்துருவத்தில் விழுந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழக இளைஞரின் ஆய்வை நாசா உறுதி செய்து நன்றி தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள இஸ்ரோ நிறுவனம் அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், தரையிறங்குவதற்கு 2.1 கிமீ தூரத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டருடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்தது. இதனால் 14 நாட்களுக்கு பிறகு லேண்டரை உயிர்ப்பிக்கும் முயற்சியை இஸ்ரோ கைவிட்டது.  இதனை தொடர்ந்து, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகள் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். பின்னர், அமெரிக்காவின் நாசா அனுப்பிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் விக்ரம் லேண்டர் விழுந்த இடம் கண்டறியப்பட்டுள்ளது. 

நாசா செயற்கைக்கோள் நிலவின் தென்துருவ பகுதியை துல்லியமாக எடுத்த புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டன. இந்த புகைப்படங்களை சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் சண்முக சுப்பிரமணியன் இதனை ஆய்வு செய்து, விக்ரம் லேண்டரின் பாகங்கள் விழுந்த இடத்தை கண்டுபிடித்து நாசாவுக்கு இமெயில் மூலம் தகவல் அனுப்பி உள்ளார். அவரது ஆய்வை நாசா விஞ்ஞானிகளும் உறுதி செய்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
 

;