science

img

இன்று பூமியைத் தாக்கும் புவி காந்த புயல் 

அமெரிக்க அரசின் விண்வெளி கண்காணிப்பு மையம், செப்டம்பர் 26 ஆம் தேதியான இன்று  பூமியை ஒரு புவி காந்த புயல் தாக்கும் என்றும், அது செயற்கைக்கோள்கள் மற்றும் மின் கிரிட்களை பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் (SWPC), செப்டம்பர் 26 ஆம் தேதி ஜி1 அல்லது ஜி2 நிலை புவி காந்த புயல் ஏற்படும் என்ற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் , இந்த புவி காந்த புயல் என்பது , சூரிய புயலிலிருந்து வேறுபட்டது என்றாலும் இது சூரியக் காற்றால் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளது . 

புவி காந்த புயல் என்பது பூமியின் காந்த மண்டலத்தில் இடையூறினை ஏற்படுத்துகிறது. சூரியக் காற்றிலிருந்து ஏற்படும் ஆற்றல் பரிமாற்றத்திற்குப் பிறகு பூமியைச் சுற்றியுள்ள விண்வெளி சூழலில் இந்த புவி காந்த புயல் நிகழ்கிறது. இத்தகைய சூழலால் ஏற்படும் மிகப்பெரிய புயல்கள் சூரிய கோரோனலின் மிகப்பெரிய  வெளியேற்றங்களுடன் (CMEs) தொடர்புடையவை என்றும் விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் கூறியுள்ளது.

இது குறித்து ஆய்வு செய்த விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையத்தின் அறிக்கையின் படி, இந்த புவி காந்த புயலின் தாக்கம் முதன்மையாக 60 டிகிரி புவி காந்த அட்ச ரேகையின் துருவத்தில் இருக்கக்கூடும், எனவே இது பவர் கிரிட்டில் தாக்கங்களை ஏற்படுத்தி செயற்கைக்கோள்களைப் பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் , புவி காந்த புயலால் வானத்தை ஒளிரச்செய்யும் அரோரா ஏற்படலாம் என்றும், இந்த அரோரா அமெரிக்காவின் வடக்கு பகுதியான வடக்கு மிச்சிகன் மற்றும் மைனே போன்ற உயர் அட்ச ரேகைகளில் தெரியும் என்றும் விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்திருக்கிறது.

;