கோவை, ஆக.19- இன்னும் 50 அல்லது 60 ஆண்டுகளில் மனிதர்கள் வாழும் பகுதியாக நிலவும் செவ்வாயும் இருக்கும் என இஸ்ரோ முன்னாள் திட்ட இயக் குநர் மயில்சாமி அண்ணா துரை தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பேசிய அவர் செப்டம்பர் 7 ஆம் தேதியை உலகமே எதிர்நோக்கி காத்திருப்ப தாகவும் இந்தியாவின் 130 கோடி மக்களும், நிலவிற்கு திரும்பவும் செல்ல வேண் டும் என்று நினைக்கும் உலக நாடுகளும் அந்த நாளை காண ஆவலுடன் காத்துள்ள னர் என்றும் கூறினார்.