science

img

சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோயை கண்டறியும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

உடலில் உள்ள சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோயை கண்டறிய புதிய தொழில்நுட்பம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு புற்றுநோய் வகையை தரப்படுத்தக்கூடியதாக நவீன முறையை, சுவீடனில் உள்ள Karolinska Institute ஆராய்ச்சியாளர்களே கண்டுபிடித்துள்ளனர். சுரப்பிகளில் உண்டாகும் புற்றுநோய்களை கண்டறிந்து அவற்றிற்கு சிகிச்சையளிப்பது தொடர்பாக, மருத்துவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். இவ்வாறான நிலையிலேயே இச்செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதேவேளை சுமார் 6600 மாதிரிகள் பயன்படுத்தப்பட்டு இம்முறைமை வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.