science

img

சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்குவது எப்போது?

சென்னை, ஆக. 20- சந்திரயான்-3 விண்கலம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை  06.04 மணிக்கு நிலவில் தரையிறக்கப் படும் என இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவுக்கு செல்லும் ‘சந்திரயான் – 3  விண்கலம் சுமந்தபடி, எல்.வி.எம்., 3 – எம் 4 ராக்கெட் ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் சீறிப்பாய்ந்த சில நிமிடங்களில் ராக் கெட்டில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்தது, புவி சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. பூமியைச் சுற்றிவந்த விண்கலத் தின் சுற்றுப்பாதை தொலைவு படிப் படியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து ஆக. 1-ஆம் தேதி புவி ஈர்ப்பு விசையிலிருந்து சந்திரயான்-3 விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும்படி அதன் பயணப் பாதை மாற்றப்பட்டது. நிலவுக்கு மிக நெருக்கமான, இறுதிக் கட்ட சுற்றுப்பாதையில் வலம் வரும் சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து லேண்டர் கலன் கடந்த 17ஆம்  தேதி விடுவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலத்தின் இறுதி வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றியடைந்துள்ளது  என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சந்திரயான்-3 விண்கலம் வரும் ஆகஸ்ட் 23, மாலை 06.04 மணிக்கு நிலவில் இறக்கப்படும்  என்று தெரிவித்துள்ளது.  மேலும் அதன் நேரலை காட்சிகளை  பேஸ்புக், யூடியூப் மற்றும் தொலைக் காட்சியில் காண்பதற்கான லிங்குகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இஸ்ரோ இணையதளம்

 https:// isro.gov.in  

youtube.com  facebook.com/ISRO

மற்றும்

டிடி நேஷனல் டிவி 17:27 மணி முதல்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.