science

img

உலகின் முதல் நீர் மற்றும் நிலத்தில் இயக்கப்படும் ட்ரோன் படகு - சீனா சாதனை

நீர் மற்றும் நிலத்தில் இயக்கப்படும் ட்ரோன் படகை தயாரித்து சீனா சாதனை படைத்துள்ளது. இந்த படகை ராணுவ பயன்பாட்டுக்காக செயல்படுத்தப்படும் என அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சீன அரசாங்கத்துடன் இணைந்து வுசாங்க் கப்பல் கட்டமைப்பை செய்யும் நிறுவனம், புதிய நீர் ஊர்தியை தயாரிக்கும் பணியில் இறங்கியது. 

மேலும் அந்த வாகனத்தை ராணுவ பயன்பாட்டுக்கு ஏற்றவாறு வடிவமைக்க வேண்டும் என வுசாங்க் நிறுவனத்திற்கு, சீன அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் முற்றிலும் மாறுபட்ட திறன் கொண்ட படகு தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தது. 

இதற்கான பணிகள் முடிவுற்றுள்ள நிலையில், இந்த புதிய தாக்கும் திறன் கொண்ட படகுக்கு மரைன் லிசார்ட் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த ட்ரோன் படகு சோதனை வெற்றியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே நிலத்திலும், நீரிலும் இயங்கக்கூடிய திறன் பெற்ற ட்ரோன் படகை தயாரித்த முதல் நாடு என சீன சாதனை படைத்துள்ளது. 

மேலும் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஆயுதங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்டவை இந்த படகில் பொருத்தப்பட்டுள்ளன. செயற்கைக்கோள் மூலமும் இந்த படகை இயக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சம். மேலும் நிலத்தில் அதிகபட்சமாக 1,200 கி.மீ தொலைவு வரை இந்த படகை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.