politics

img

வறட்சியை சமாளிக்க தமிழகத்திற்கு

மத்திய அரசிடம் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

சென்னை, ஜூன 21 தமிழகத்தில் நிலவும் வறட்சியை சமாளிக்க ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.  தில்லியில் அனைத்து மாநில நிதியமைச்சர்களின் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. பட்ஜெட் தயாரிப்பில் மாநில அரசின் கருத்துகளை கேட்கும் வகையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் தமிழகம் சார்பில் நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து வரும் பட்ஜெட்டிலேயே நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் தமிழகத்தில் நிலவி வரும் வறட்சியை சமாளிக்க சிறப்பு திட்டத்தை அமல்படுத்தும் வகையில், ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். தூய்மை இந்தியா திட்டத்தைப் போலவே, மழைநீர் சேகரிப்பு திட்டத்தையும் இயக்கமாக மாற்றி நடைமுறைப் படுத்த வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.

;