politics

img

பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை, செப். 14- டிஜிட்டல் பேனர் நிறுவினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவ டிக்கை மேற்கொள்வதுடன் ஒரு  ஆண்டு சிறைத் தண்டனை மற்றும்  ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக் கப்படும் என தமிழக அரசு  எச்ச ரித்துள்ளது. சென்னை பள்ளிக்கரணை யில் பேனர் சரிந்து விழுந்த விபத்தில் பெண் பொறியாளர் சுபஸ்ரீ பலியானார்.பேனர் கலாச் சாரத்தால் பெண் ஒருவர் பலியான  விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சுபஸ்ரீ பலியான சம்ப வத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம் கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. மேலும் அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரி வித்ததுடன் பேனர் வைக்கக் கூடாது என தங்கள் கட்சியின ருக்கு உத்தரவு பிறப்பித்துள்ள னர். இந்தநிலையில் தமிழகம் முழுவதும் பேனர்கள், கொடி கள், கட்-அவுட்டுகள் வைப்ப தற்கான தடை உத்தரவை கடு மையாக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமி ழக அரசு சுற்றறிக்கை அனுப்பி  உள்ளது. அனைத்து மாவட்டங்க ளிலும் இந்த உத்தரவை முறை யாக செயல்படுத்தும் வகையில்  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும் படி அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடை யூறாக, உள்ளாட்சி அமைப்பு களின் நெடுஞ்சாலைகள், இணைப்பு சாலைகள், தெருக் கள் மற்றும் நடைபாதைகளில் டிஜிட்டல் பேனர் நிறுவக் கூடாது.  இதுதொடர்பாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் டிஜிட்டல் பேனர் கடை உரிமை யாளர்களுடன் மாவட்ட அளவி லான கூட்டம் நடத்தப்பட்டு  உயர்நீதிமன்ற  உத்தரவு விவரம் எடுத்துரைக்கப்படவேண்டும். உயர்நீதிமன்ற மற்றும் அர சின் அறிவுரைகளை மீறி டிஜிட்டல்  பேனர் நிறுவினால் சம்பந்தப் பட்டவர்கள் மீது சட்டப்படி குற்ற வியல் நடவடிக்கை மேற்கொள் வதுடன் ஒரு ஆண்டு சிறை தண்  டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபரா தம் விதிக்கப்படும். அல்லது இரண்டு தண்டனைகளும் சேர்த்து நடைமுறைப்படுத்தப்படும். நெடுஞ்சாலை மற்றும் நடை பாதைகளில் வைக்கும் பொருட்டு  டிஜிட்டல் பேனர்கள் அச்சிடுப வர்கள் மீதும் குற்றவியல் நடவ டிக்கை எடுக்கப்படும். மேலும் அனுமதியின்றி நிறுவப்படும் டிஜிட்டல் பேனர் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை கண்காணிக்க தவறும் அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

;