politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக அமைச்சர் செங்கோட்டையன் :- நீட் தேர்வுப் பயிற்சிக்கு அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்.
ச.சா - ஒப்பந்தம் போட்டு, வகுப்பு எடுக்குறதுக்குள்ள மத்திய அரசு வேற ஒரு குறுக்கு வழியக் கொண்டு வந்துருவாங்க..!!
****
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் :- ஏழைகளுக்கும் விரைவாக நீதி கிடைக்க வேண்டும்.
ச.சா - ஆட்சில இருக்குறவங்க கிட்ட சத்தமா சொல்வீங்களா..??
****
நடிகர் ரஜினிகாந்த் :- மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்.
ச.சா - படத்துல நடிக்குறதப் பத்திதான சொல்றீங்க..??
****
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் :- பொருளாதாரத்தை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
ச.சா - ரகசியமாச் செஞ்சீங்களோ..??

;