politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:- உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை இம்மாத இறுதியில் வெளியிடப்படும்.
ச.சா - தேர்தல் நடத்துவீங்களா..??
***********
அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஆலிஸ் வெல்ஸ்:- காஷ்மீர் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அமெரிக்கா நம்புகிறது.
ச.சா - உங்க ஆக்கிரமிப்புக்கு எதிரான உலக மக்கள் கருத்துக்கு முதல்ல மதிப்புக் குடுங்க..!!
***********
முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி:- கருத்து வேறுபாடுகள் கூட வன்முறையில் முடிவது வேதனையளிக்கிறது.
ச.சா - இதுக்கு இப்படினா, கும்பல் கொலை, ஆணவக் கொலைக்கெல்லாம் என்ன பண்ணப் போறீங்க..??
***********
பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு:- தடையில்லா வணிக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளைப் பாதிக்கும்.
ச.சா- அப்படினா அதுல மத்திய அரசு கையெழுத்துப் போட்டுருமே..??

;