politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

மத்திய அரசு: நித்தியானந்தாவை இந்தியாவுக்குக் கொண்டு வர கர்நாடகா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ச.சா - இவங்களே அனுப்பிட்டு, கொண்டு வர நடவடிக்கை எடுக்குறதா சொல்லிருக்குறாங்களோ..??
*****
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்: எந்தப் பயமும் இல்லாமல் வங்கிகள் கடன் வழங்க வேண்டும்.
ச.சா - அப்புடியே வாங்குனவங்க ஓடிட்டாலும் உங்களுக்கு பிரச்சனை இல்லையே..??
*****
குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு: மக்களுக்குப் போராட உரிமை உள்ளது.
ச.சா - போராடுனா தேச விரோதினு ஆளுங்கட்சி சொல்லுதே...??
*****
அமைச்சர் செங்கோட்டையன்: பிரதமரின் பேச்சைக் கேட்க மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை.
ச.சா - அப்புறம் எதுக்கு வரச்சொல்லி சுற்றறிக்கை அனுப்புனீங்க..??

;