politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி: அயோத்தி விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முதிர்ச்சியுடன் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
ச.சா - இந்த முதிர்ச்சிய சபரிமலை விவகாரத்துல ஏன் நீங்க காட்டல..??
 

பாமக தலைவர் ஜி.கே.மணி: உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் மத்திய அரசு நிதி கிடைக்கவில்லை.
ச.சா - இவ்வளவு நாளா நீங்க ஏன் இதக் கேக்காம இருந்தீங்க..??
 

மத்திய அமைச்சர் அமித் ஷா: ஜம்மு - காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ளது.
ச.சா - மாநிலத்தையே சிறைச்சாலையா மாத்திட்டீங்களே..??
 

தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ:  சினிமா சிறப்புக் காட்சிகளுக்கு வெளிப்படையான கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும்.
ச.சா - உங்களுக்குப் பிடிக்காதவங்க படம் வர்றப்ப மட்டும் இப்புடிப் பேசிட்டு விட்டுருவீங்களா..??

;