politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி :- ஒரு விஞ்ஞானி தனது வாழ்க்கையை நாட்டுக்கே அர்ப்பணிக்கிறார்.
ச.சா - ஆனா அறிவியலுக்கு புறம்பா பேசி அவங்க அர்ப்பணிப்ப ஏன் அலட்சியப்படுத்துறீங்க..??
 

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் :- கோலங்களின் பின்னணியில் பாகிஸ்தான் சதிக்கான ஆதாரம் உள்ளது.
ச.சா - பேசாம பாஜகவுலயே சேந்துரலாமே..??
 

செய்தி :- மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதாதளம் சேருகிறது.
ச.சா - பாஜகவுக்கு நெருக்கடி அதிகமாகுறதுனால பேரம் பேச முடியுதோ..?
 

தினமலர் செய்தி :- உற்பத்தித் துறை தொடர்ந்து 29 மாதங்களாக வளர்ச்சி.
ச.சா - அரசுப் புள்ளிவிபரமே சரிவுன்னு சொல்லுதே...??

;