politics

img

பிளைடுக்கும் வரி போடுது-மோடி அரசு

மோடி மோடி மோடியின்னு 
ஓட்டு போட்டியே-நீ
போட்ட ஓட்டு அத்தனையும் 
மோசம் போயிடிச்சே 
ஓடி ஓடி துட்டு வாங்கி 
குவாட்டர் அடிச்சியே-இப்ப 
கோவணத்துக்கும் வரி போடுவாங்கன்னு 
கலங்கி நிக்கிறியே-தல
குனிஞ்சு வாடுறியே
(மோடி...)
பேனா மையுக்கும் வரி உயர்த்தி 
ஜிஎஸ்டி ன்னு சொல்லுது-இப்ப
எல்இடி வெளிச்சத்துக்கும் வரியை போடுது-
மாவு ஆட்டும் கிரைண்டருக்கும் 
ஜிஎஸ்டின்னு சொல்லுது-இனி 
மசுருக்குந்தான் வரியை 
போட்டு ஜிஎஸ்டி ன்னு சொல்லபோகுது
(மோடி...)
சோப்பு சீப்பு பவுடருக்கும் 
ஜிஎஸ்டின்னு சோல்லுது 
நாய்க்கு போடும் பெடிகிறிக்கும் 
ஜிஎஸ்டி வரி உயருது 
டவுசர் ஜட்டி பனியனுக்கும் 
ஜிஎஸ்டி ன்னு சொல்லது - நாட்டை 
மொட்டையடிச்சது போதாதின்னு 
பிளைடுக்கும் வரி போடுது-மோடி அரசு
பிளைடுக்கும் வரி போடுது
(மோடி...)

எம். ரமேஷ்
தியாகி என்.வி.கலைக்குழு

;