politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்.
ச.சா - மக்களவை, அதோட நடந்த சட்டமன்ற இடைத்தேர்தல், கிராமப்புற உள்ளாட்சினு தொடர்ந்து தோத்துட்டு எந்த தைரியத்துல பேசுறாரு..!!
 

சட்டப்பேரவை துணைத் தலைவர் வி.ஜெயராமன்:- சிறுபான்மையினருக்கு வார்த்தைகளாக இல்லாமல் செயல்பாட்டில் உதவுவது அதிமுக அரசுதான்.
ச.சா - சிறுபான்மையினர்னா, பெரிய முதலாளிகள நினைச்சுக்குட்டாரோ..??
 

அமைச்சர் காமராஜ் :- அத்தியாவசியப் பொருட்களைக் கடத்தினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை.
ச.சா - தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சிப் பிரதி நிதிகள உங்க ஆட்கள் கடத்துறாங்களே, அதுவும் இதுல வருமா..??
 

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்:-  தமிழகத்தை  சொர்க்கமாக்க வேண்டும் என்பதே கனவு.
ச.சா - ஒவ்வொருத்தரும் கனவு காணச் சொல்லிட்டே இருந்தா எப்புடி..??

;