politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் (யுஏபிஏ) சட்ட திருத்தம் நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கும் மாநில அரசுகளின் அதிகாரத்துக்கும் எதிரான ஒருதலைப்பட்சமான யுத்தமே ஆகும். மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு அந்தந்த மாநில அதிகார வரம்புக்கு உட்பட்டதாகும். யார் தீவிரவாதி என்பதை மத்திய உள்துறை அமைச்சகம் தன்னிச்சையாக முடிவு செய்ய அதிகாரம் அளிப்பதே யுஏபிஏ சட்ட திருத்தம். தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசின் அதிகார எல்லையை கடந்து முடிவுகள் எடுக்கவும் ஒரு நபரை தீவிரவாதி என அறிவித்து கைது செய்யவும் அது மத்திய அரசுக்கு சட்டப்பூர்வமான வாய்ப்பை அளிக்கிறது. கைது செய்யப்பட்டவரின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் அது வாய்ப்பளிக்கிறது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, யுஏபிஏ சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்தது. குடியுரிமையை மறுக்கும் யுஏபிஏ சட்ட திருத்தத்தை ஏற்க முடியாது என்பது எமது கட்சி நிலைப்பாடு. யுஏபிஏவுக்கு எதிரான போராட்டம் தொடரும். கேரளத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் யுஏபிஏ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதேவேளை மாவோயிஸ்ட்டுகள் மீதான நடவடிக்கைகளை முன்னிறுத்தி எழுப்பப்படும் மற்ற பிரச்சனைகள் அந்த அரசை சீர்குலைக்கும் செயலே ஆகும்.

;