politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி :- இந்தியக் குடிமகன்கள் அனைவரும் நீதித்துறை மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
ச.சா - சபரிமலை விவகாரத்துல கலாட்டா பண்ணுன உங்க கட்சிக்காரங்க வெளிநாட்டுக்காரங்களா..??
 

தமிழக அமைச்சர் பாண்டியராஜன்:- தமிழைக் காக்க இளைஞர்கள் போராட வேண்டும்.
ச.சா - அரசாங்கம் இளைஞர்களோட நிக்குமா..??
 

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் :- நடிகர்களின் கருத்துகளை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.
ச.சா - ஸ்மிருதி இரானியைச் சொல்றாரா..??
 

முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் சுனில் கவாஸ்கர் :- வெளியேற்றப்படுவதற்கு முன்பாக தோனி ஓய்வு பெற வேண்டும்.
ச.சா - வெளியேத்துறதுக்கு ஏற்பாடு நடக்குதோ..??

;