politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

திரிணாமுல்- பாஜக இரண்டுமே வன்முறை செய்கின்றன!

‘மேற்கு வங்கத் தில் பாஜக தோல்வி அடைந்ததில் இருந்து அங்கு வன்முறை வெடித்த செய்திகள் வருகின்றன. இதுவரை வாக்கெடுப் புக்கு பிந்தைய வன் முறையில் 17 பேர் இறந்துள்ளனர். இதில்9 பேர் பாஜகவையும், மற்றவர்கள் திரிணாமுல் கட்சியையும் சேர்ந்தவர்கள். இதன் பொருள் இரு தரப்பினரும்வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்பதுதான். மேற்கு வங்கத்தில் அமைதி மற்றும்சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்புமம்தா பானர்ஜியை போலவே மத்திய அரசுக்கும் உள்ளது’ என்று சிவசேனா கட்சி கூறியுள்ளது.

                       *****************

கல்விக் கட்டணம் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது!

தற்போதைய கொரோனா சூழலில்முழு கல்வி கட்டணத்தை செலுத்துமாறு, தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) உத்தரவிட்டுள்ளது. மேலும்,மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தை 4 தவணைகளில் வசூலிக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஏஐசிடிஇ, கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களை எந்த காரணம் கொண்டும் வேலையிலிருந்து நீக்கக் கூடாது என்றும் தெரிவித் துள்ளது.

                       *****************

ஜெகன்மோகன் ரெட்டி மோடிக்கு வக்காலத்து!

முதல்வர்கள் கூட்டத்தில், பிரதமர் மோடிதான் பேசுகிறாரே தவிர, மாநில முதல்வர்களின் கருத்துக்களைக் கேட்பதில்லை; என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் விமர்சித்திருந்தார். இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான போரில் இதுபழிபோடுவதற்கான நேரமல்ல. தொற்றுநோயை எதிர்த்து போராட ஒன்றிணைந்து, பிரதமரின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய நேரமிது என்று மோடிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிவக்காலத்து வாங்கியுள்ளார்.

                       *****************

கொரோனாவை  ஒழித்துக் காட்டுவேன்!

பாஜக ஆதரவு பாலிவுட் நடிகையும், சர்ச்சைக்குப் பெயர் போனவருமான கங்கனா ரணாவத், தனக்குகொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், ‘என் உடலில் கொரோனா ஆட்டம் போட இடம் கொடுக்க மாட்டேன். அதனை அழித்து விடுவேன்’ என்று ரணாவத் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

                       *****************

இளைஞர்கள் அலட்சியமாக இருப்பது மிகுந்த ஆபத்து!

இளைஞர்கள் தங்களுக்கு கொரோனா பாதிப் பெல்லாம் ஏற்படாது என நினைத்துக் கொள்கின்றனர். கொரோனா விஷயத்தில் இளைஞர்கள் தவறான நம்பிக்கை கொண் டுள்ளனர்: அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் அதிகபட்ச ஆபத்து உள்ளதுஎன, அண்மையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ள தில்லி ஆம் ஆத்மி கட்சிஎம்எல்ஏ பரத்வாஜ் எச்சரித்துள்ளார்.

;