அமமுகவில் இருந்து விலகிய தங்கதமிழ்ச்செல்வன் இன்று மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கும் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரான தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தங்கதமிழ்ச்செல்வன் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்.
இந்நிலையில் தங்கதமிழ்ச்செல்வன் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். தங்கதமிழ்ச்செல்வனுடன் தேனி மாவட்ட நிர்வாகிகள் பலரும் இன்று திமுகவில் இணைந்து கொண்டனர்.