politics

img

இன்னொரு பாலஸ்தீனத்தை உருவாக்குகிறீர்கள்

புதுதில்லி, ஆக.5- இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு ஏற்பட்டுள்ள நிலை நாளை எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் டி.கே.ரங்க ராஜன் ஆவேசத்துடன் கூறினார். மாநிலங்களவையில் திங்கள்கிழமை, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட மசோதாவின் மீதான விவாதம் நடை பெற்றது. இதில் கலந்துகொண்டு டி.கே.ரங்கராஜன் பேசியதாவது: இன்றைய தினம்  கறுப்பு தினமாகும். நாட்டின் அரசமைப்புச்சட்டம் பாஜக அர சாங்கத்தால் பலாத்காரமான வன்தாக்கு தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.  மாநிலத்தைப் பிரிப்பதற்கு நீங்கள்  ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் கலந்தா லோசனை செய்திடவில்லை. லடாக் மக்களு டன் கலந்தாலோசனை செய்திடவில்லை. அவ்வாறு எதுவும் செய்யாமலேயே நீங்கள் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தைக் கலைத்திருக்கிறீர்கள். அங்கே எவ்விதமான  தேர்தலையும் நடத்திட நீங்கள் தயாரில்லை. 35ஆயிரம் துருப்புக்களைக் கொண்டுபோய் அங்கே நிறுத்தி இருக்கிறீர்கள். இதன் மூலம் மற்றுமொரு பாலஸ்தீனத்தை உருவாக்கி இருக்கிறீர்கள். நாளை இதேபோல் நீங்கள் வேறு எந்த மாநிலத்திலும் செய்திடலாம். வேறெந்த  மாநிலத்தையும் துண்டு துண்டாக்கலாம். அங்கேயுள்ள சட்டமன்றங்களைக் கலைத் திடலாம். அதற்கான சட்டமுன்வடிவுகளை இங்கே கொண்டுவந்து நிறைவேற்றிக் கொள்ளலாம். உங்கள் ஆட்சியில் அரசமைப்புச்சட்டம் ஆபத்தில் இருந்து கொண்டிருக்கிறது.

எனவேதான் ஆர்எஸ்எஸ்/பாஜக இந்திய அரசமைப்புச் சட்டத்தை அழித்திடும் என்றும், இந்தியாவின் ஒற்றுமையை அழித்திடும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தலுக்கு முன்பு மக்களை எச்சரித்தது.  இந்த இக்கட்டான நேரத்தில் நாங்கள் ஜம்மு- காஷ்மீர் மக்களின் பக்கம் நின்று அவர்க ளுக்கு ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு எதுவும் தெரியாமலேயே அவர்கள் மீது இத்தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைப் பிரிக்கும் சட்டமுன்வடிவுக்கு சில எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இது தவறு என்பதை நாளை அவர்கள் உணர்வார் கள். தாக்குதல் அவர்களுக்கு எதிராக வரும்போது அதை அவர்கள் உணர்வார்கள்.  உதாரணமாக, புதுச்சேரி குறித்து உங்கள் நிலை என்ன? அதனைத் தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டி ருக்கிறார்கள். அவ்வாறு செய்வீர்களா அல்லது தமிழ்நாட்டுடன் அதனை இணைத்துவிடுவீர்களா? மொரார்ஜிதேசாய் ஒருதடவை அவ்வாறு செய்தார். பின்னர் அதில் தோல்வியடைந்தார்.  இது மிகவும்  ஆபத்தான விஷயம்.

ஜம்மு-காஷ்மீர் மக்களின் வாழ்க்கை ஆபத்தில் இருக்கிறது. லடாக் மக்களின் வாழ்க்கை ஆபத்தில் இருக்கிறது. அவர்களின் எதிர்காலம் ஆபத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் ஆபத்தில் இருக்கிறது. நீங்கள் இந்துக்களுக்காக இருப்பதாகச் சொல்கிறீர்கள். ஆனால் அமர்நாத் யாத்தி ரையை ரத்து செய்கிறீர்கள். உண்மையில் நீங்கள் இந்துமத நம்பிக்கையாளர்களும் கிடையாது.  உண்மையில் நீங்கள் இந்துக் களுக்காகவும் இல்லை. இந்துக்களுக்காக இருக்கிறோம் என்ற பெயரில், நீங்கள் இந்து மதத்தையும் அழித்துக் கொண்டி ருக்கிறீர்கள். அனைத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே இந்தச் சட்டமுன்வடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். இவ்வாறு டி.கே.ரங்கராஜன் பேசினார். (ந.நி.)

;