politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டினா ஜார்ஜீவா :- உலகப் பொருளாதார மந்த நிலையால் இந்தியாவுக்குக் கூடுதல் பாதிப்பு.
ச.சா - புள்ளிவிபர மோசடிகளுக்கு இடம் குடுக்காம உண்மையச் சொல்லிருக்காரு..!!!
 

பீகார் காவல்துறை :- 49 பிரபலங்கள் தேச விரோத செயலில் ஈடுபட்டதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை.
ச.சா - போட்டது தேச விரோத வழக்கு.. விசாரிக்காமலேயே வழக்கு போடுறத எதுல சேர்க்குறது..??
 

அம்பானியின் ஜியோ நிறுவனம் :- அழைப்பு சேவைக்கு கட்டணம்.
ச.சா - பல நிறுவனங்கள காலி பண்ணியாச்சுல்ல. இனிமே மக்கள வாட்டி எடுப்பாங்களோ..??
 

செய்தி :- காஷ்மீர் நிலவரம் குறித்து ஐ.நா. அமைப்பு கவலை.
ச.சா - அவங்க மேலயும் ஒரு வழக்கு போடுவாங்களோ..??