politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் :- விரைவில் காகிதமில்லா பேரவை.
ச.சா - போற போக்கப் பாத்தா அதிகாரமில்லாத சட்டமன்றத்தையே பாஜக உருவாக்கிரும் போலருக்கே..!!
 

பிரதமர் மோடி :- காங்கிரஸ் கூட்டணி அதிகார வேட்கையுடன் உள்ளது.
ச.சா - அதிகார வேட்கைனா மகாராஷ்டிரத்துல உங்களோட வேலதான் மக்களுக்கு நினைவுக்கு வருமே..??
 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- அதிமுக அரசுதான் சமூக நீதியைப் பாதுகாக்கிறது.
ச.சா - இடஒதுக்கீடு மேல தொடர்ந்து மத்திய அரசு நடத்துற தாக்குதல தடுக்க அதிமுக என்ன பண்ணுது ??
 

செய்தி :- அஜித் பவாருக்கு எதிரான ஊழல் வழக்கு கைவிடப்பட்டது.
ச.சா - பட்னாவிஸ் ஒரு நாள் முதல்வரானதுக்கு கைம்மாறோ..??

;