politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

இந்தியாவில் 8 தடுப்பூசிகளுக்கான திட்டம் எப்படி 2 தடுப்பூசிகளாக சுருங்கியது?

மோடியின் இத்தகைய மிகப்பெரிய முட்டாள்தனமான தவறுகள் காரணமாகவே இன்று மக்கள் தமது உயிர்கள் மூலம் விலையை கொடுத்து கொண்டுள்ளனர். 8 தடுப்பூசிகளுக்கான வாய்ப்பு இருந்தும் அது 2 தடுப்பூசிகளாக குறைக்கப்பட்டது. எதற்காக? “மேட் இன் இண்டியா” எனும் மோடியின் சுயபுராணம் பாடும் பொய் பிரச்சாரத்துக்காக! கிரிமினல் குற்றம்!

                                       ********************

தேசிய சொத்துக்களையும் மக்களின் செல்வத்தையும் தனது கூட்டுக் கொள்ளை களவாணிகள் பறிக்க அனுமதித்துவிட்டு இப்பொழுது வெளிநாட்டு கொள்ளையர்களையும் அழைக்கிறார். “வெளிப்படையான திறந்த பன்முக கலாச்சாரம்” இந்தியாவில் உள்ளதாம்; கூறுகிறார். வெறுப்பை பரப்புவது/வன்முறை/கும்பல்கொலை/சிறுபான்மையினரை குறிவைப்பது/மாற்று கருத்தாளர்களை சிறையில் தள்ளுவது இவையெல்லாம் திறந்த வெளிப்படை தன்மையா?
இரட்டை நாக்கு! அற்புதம் மோடி அவர்களே!

                                       ********************

தேசிய குடும்ப மாதிரி ஆய்வறிக்கையின் படி குஜராத் கிராமப்புறங்களில் 29% பெண் குழந்தைகள்தான் உயர்நிலை மேல் பள்ளிக்கு செல்கின்றனர். ஆனால் கேரளாவில் இது 93.6%. இந்தியாவிலேயே குஜராத் நிலைமைதான் மோசமாக உள்ளது. பீகாரைவிட மோசம்! 

மோடியின் குஜராத் மாடல்!?

- தகவல் இந்து பத்திரிக்கை-17.06.2021

                                       ********************

தொற்று காலத்தில் வறுமைக்குள் தள்ளப்பட்ட உலக மக்களில் 57.3% பேர் இந்தியர்கள். மோடி அரசின் தவறான கொள்கைகளுக்கு மேலும் ஒரு நிரூபணம். 

                                       ********************

தனது தவறான தோல்வியில் முடிந்த நடவடிக்கைகள் காரணமாகவும் பெருந்தொற்றை தவறாக கையாண்டதாலும்  மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை எதிர்கொள்ள மோடி மறுக்கிறார். அதன் விளைவாக உருவான மக்களின் உயிரிழப்பு/பேரழிவு  எனும் வேதனை தரும் உண்மைகளைமறைக்க முயல்கிறார். அத்தகைய ஏமாற்று வேலை சுய தோல்வியில்தான் முடியும். இப்பொழுதாவது மக்களின் உயிரை காக்க இலவச தடுப்பூசி திட்டத்தை தேவையெனில் வீடு வீடாக செயல்படுத்துங்கள்.

                                       ********************

பெருந்தொற்று விளைவித்த மருத்துவ பேரழிவு காலத்தில் மக்களுக்கு உதவ மோடி அரசாங்கம் ஈவு இரக்கமற்ற  முறையில் மறுக்கிறது. பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவதன் மூலம் பணவீக்கத்தை அதிகரித்து மக்களின் வாழ்வில் மேலும் துன்பங்களை சுமத்துகிறது. பெட்ரோலிய பொருட்கள் மீதான சுங்கவரியை உடனே திரும்பப் பெறுங்கள்.

                                       ********************

நட்டாஷா/கலிட்டா/ஆசிஃப் இக்பால் ஆகியோர் நீதிமன்ற பிணை ஆணை பிறப்பித்து 48 மணி நேரத்துக்கு  பிறகு  சிறையிலிருந்து விடுதலை. நமது அரசியல் சட்டத்தையும் குடி மக்களின் உரிமைகள்/ பேச்சு சுதந்திரம் குறித்தும் உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவாதம் செய்திருப்பது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பொய்யான குற்றச்சாட்டில் “UAPA”/தேச துரோகம் ஆகிய ஆள்தூக்கி சட்டங்களின் கீழ் வழக்குகளில் சிக்க வைத்து தேசம் முழுதும் சிறையில் உள்ள அனைவரையும் உடனே விடுதலை செய்க! மக்களின் ஜனநாயக உரிமைகளையும் குடியுரிமைகளையும் காலில் போட்டு மிதிப்பதை சிறிது கூட பொறுத்து கொள்ளப்படக்கூடாது.

                                       ********************

நமது தேசத்தின் எதிர்கால சந்ததியினர் மத்திய/மாநில பா.ஜ.க. அரசாங்கங்களால் எப்படி அழிக்கப்படுகின்றனர் என்பதை இந்த பட்டியலில் பாருங்கள். இளைய தலைமுறையினரின் கல்வி/மருத்துவத்தில் முதலீடு செய்வதற்கு பதிலாக அவர்கள் வீணாக்கப்படுகின்றனர். மீண்டும் இடது ஜனநாயக முன்னணி தலைமையில் கேரளா அரசாங்கம் முதல் இடத்திலும் பா.ஜ.க. தலைமையிலான குஜராத் அரசாங்கம் கடைசி இடத்திலும் உள்ளன.

                                       ********************

தொற்று காலத்தில் உருவான ஏழ்மையில் 57.3% இந்தியாவில்! நடுத்தர வருமானம் வீழ்ச்சியில் 59.3% இந்தியாவில்! பியூ  நிறுவனம் ஆய்வறிக்கை!இது மிகவும் வெட்கக்கேடானது பிரதமர் மோடி அவர்களே! வருமான வரி வரம்புக்குள் வராத ஏழை குடும்பங்களுக்கு உடனடியாக மாதத்திற்கு ரூ.7500 நிதி உதவி/இலவச உணவு தானியங்கள்/பருப்பு வகைகள்/சர்க்கரை/சமையல் எண்ணெய் ஆகியவற்றை வழங்குங்கள். வாழ்வாதாரத்தை அழிக்கும் செங்குத்தாக உயரும் பணவீக்கத்தை தடுத்து நிறுத்துங்கள்.

;