politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

வழக்கத்தை மாற்றிய தலைமை நீதிபதி!

உச்சநீதிமன்றத்து க்குப் புதிய தலைமைநீதிபதி அறிவிக்கப் பட்ட பிறகு, அப்போதுபதவியில் இருக்கும் தலைமை நீதிபதி கொலீஜியம் கூட்டத்தை நடத்துவது இல்லை. ஆனால், அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா, கடந்தசெவ்வாய்க்கிழமையே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், எஸ்.ஏ. பாப்டேவியாழனன்று கொலீஜியம் கூட்டத்தை நடத்தியுள்ளார். ஆனால், இந்த கொலீஜியத்தின் பரிந்துரைகள் ஏற்கப்படாது என்று கூறப்படுகிறது. பாப்டே ஏப்ரல் 24 அன்று ஓய்வுபெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

                                   **************

உ.பி., ஒடிசா, மராட்டியத்தில் தடுப்பூசி மையங்கள் மூடல்!

தடுப்பூசி தட்டுப் பாடு இல்லை என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் கூறிவரும் நிலையில், ஒடிசா மாநிலத்தில் மட்டும் பற்றாக்குறை காரணமாக 300 கொரோனா தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதேபோல உ.பி. மாநிலம் காசியாபாத்தில் உள்ள பலதனியார் மருத்துவமனைகளும் கடந்த திங்கட்கிழமை முதல் தடுப்பூசிகள் செலுத்தவில்லை. மகாராஷ்டிர மாநிலத்தில், மும்பை மற்றும் புனே பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளதாக மராட்டிய அரசு அறிவித்துள்ளது. 

                                   **************

தனியார் பள்ளி ஆசிரியர்க்கு 2000 ரூபாய், 25 கிலோ அரிசி!

கொரோனா பரவல் வேகமாக அதிகரித்துவரும் நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பள்ளிகளை மூடுமாறு, சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரம் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களை சேர்ந்த ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் 2000 ரூபாய் பணமும், இலவசமாக 25 கிலோ அரிசியும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

                                   **************

ஊரடங்கிற்கு பெயர்சூட்டிய பிரதமர் நரேந்திர மோடி

கொரோனா பரவல் தொடர்பாக, மாநில முதல்வர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா இரவில் மட்டுமேவருவதல்ல, நாம் வாழ்வதே கொரோனா காலத்தில்தான். எனவே, இனிமேல்இரவு நேர ஊரடங்கை ‘கொரோனா ஊரடங்கு’ என்று பெயர்சூட்டி அழைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

                                   **************

‘ரோமியோ எதிர்ப்பு படை’  ஆதித்யநாத் வாக்குறுதி

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ‘ரோமியோ எதிர்ப்பு படை’ உருவாக்கப்படும் என்று உ.பி. மாநில சாமியார் முதல்வர் ஆதித்யநாத் வாக்குறுதி அளித்துள்ளார். ரோமியோ எதிர்ப்புப் படை என்பது,பெண்களின் பின்னால் ஆண்கள் செல்வதைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில், பெண்களையே கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட படை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படை உ.பி. மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

;