politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

‘எஸ்மா’வுக்கெல்லாம்  அஞ்ச மாட்டோம்..!

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் போக்குவரத்து ஊழியர்கள் மீது ‘எஸ்மா’ சட்டம் பாயும் என்று கர்நாடக மாநில பாஜக முதல் வர் எடியூரப்பா மிரட்டல் விடுத்திருந்த நிலையில், “இப்படியெல்லாம் கூறி எங்களை பயமுறுத்துவதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.அதற்கெல்லாம் பயந்து நாங்கள் போராட்டத்தைக் கைவிட மாட்டோம்” என்று போக்குவரத்து ஊழியர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். “கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் நிற்காது”என்றும் தெரிவித்துள்ளனர்.

                             ***************

பேரழிவைச் சந்திக்கும் ஆபத்தில் நாடு!

“பணமதிப்பு நீக் கம் முதல் கொரோனா தடுப்பூசி வரை பாஜகவின் தவறான கொள்கைகளால் இந்தியர் கள் கடுமையாக பாதிக் கப்பட்டு வருகின்றனர். தற்போது அனைவருக்கும் தடுப்பூசி வழங்க மறுக்கும், மத்திய அரசின் பிடிவாதத்தால் நாடு பேரழிவை சந்திக்கப் போகிறது. மோடி அரசைபோல், ஜனநாயக விரோத அரசு உலகிலேயே இல்லை” என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் சாடியுள்ளார்.

                             ***************

இந்திய பொருளாதாரம் மீது ஐஎம்எப் நம்பிக்கை!

2020-ஆம் ஆண் டில், 2.3 சதவிகிதம் என்ற நேர்மறையான வளர்ச்சி விகிதத்தைக் கொண்ட ஒரே பொருளாதாரமாக சீனா இருந்தது. எனினும், சீனாவின் வளர்ச்சி விகிதம் 2021-இல் 8.6 சதவிகிதமாகவும், 2022-இல் 5.6 சதவிகிதமாகவும் மட்டுமே இருக்கும் என்று கணித்துள்ள சர்வதேச நாணய நிதியம் (IMF), மாறாக, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2021-இல் 12.5 சதவிகிதமாகவும், 2022-இல் 6.9 சதவிகிதமாகவும் இருக்கும் என்று பெரும் நம்பிக்கை வைத்துள்ளது. 

                             ***************

தேஷ்முக்கைத் தொடர்ந்து அனில் பரப்-புக்கும் குறி!

ரூ.100 கோடி மாமூல்வசூலித்துத் தரச் சொன்னதாக மும்பைகாவல்துறை ஆணையர் பரம்பீர் சிங் வைத்த குற்றச்சாட்டால், மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கின் (என்சிபி) அமைச்சர் பதவி பறிபோனது. இந்நிலையில், போக்குவரத்து அமைச்சர் அனில் பரப்பும் (சிவசேனா) இதேபோல ரூ. 2 கோடிவசூலித்துத்தரச் சொன்னதாக, கார் வெடிகுண்டு வழக்கில் கைதாகியுள்ள மற்றொரு காவல்துறை அதிகாரியான சச்சின் வாசே-வும் கடிதம் வெளியிட் டுள்ளார்.

                             ***************

டிஆர்எஸ்-ஸில் கரைந்த டிடிபி எம்எல்ஏ-க்கள்!

சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம்கட்சிக்கு, தெலுங்கானா சட்டப்பேரவையில் மெச்சா நாகேஸ் வர் ராவ் மற்றும் சந்திரா வெங்கட வீரைய்யா என்ற 2 எம்எல்ஏ-க்கள் இருந்துவந்தனர். இந்நிலையில், அந்த 2எம்எல்ஏ-க்களுமே தெலுங்குதேசத்திலிருந்து விலகி, கே. சந்திரசேகர ராவ்தலைமையிலான ஆளும் தெலுங் கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணைந்துள்ளனர்.

;