politics

img

தீக்கதிர் அரசியல் விரைவுச் செய்திகள்..

கேரளத்தில் 74.02 சதவிகித வாக்குகள் பதிவு!

கேரள சட்டப்பேரவைக்கு செவ்வாயன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற் றது. இதில், மொத்தமுள்ள 140 தொகுதிகளில் காலை 7 மணிக் குத் துவங்கி இரவு 7 மணிவரை நீடித்த வாக்குப்பதிவில் 74.02 சதவிகித வாக்குகள் பதிவாகின. முதல்வர் பினராயி விஜயன் போட்டியிட்ட தர்மடம், தாலிபரம்பா, மட்டன்னூர்,குண்டமங்கலம், குட்டியாடி, குன்னத்துநாடு, செர்தலா மற்றும் அரூர் தொகுதிகளில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.

                                       ****************

‘வெற்றி எங்களுக்கே..!’ ‘மெட்ரோமேன்’ காமெடி

‘‘பாலக்காடு தொகுதியில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அதிகவாக்குகள் வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெறுவேன். கேரளாவில் இந்த தேர்தலில் பாஜக தீவிரமாக பணியாற்றி மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில் எந்த சந்தேகமும் இல்லை’’ என்றுகேரளத்தின் பாஜக ‘முதல்வர்’ வேட்பாளரான மெட்ரோமேன் ஸ்ரீதரன் காமெடி செய்துள்ளார்.

                                       ****************

‘2047-இல் புதிய இந்தியா’ வெங்கையா பயமுறுத்தல்! 

பணமதிப்பு நீக் கம், ஜிஎஸ்டி அமலாக் கம் போன்றவற்றின் பொதெல்லாம் ‘புதிய இந்தியா’ பிறந்து விட் டதாக பிரதமர் மோடி தாலாட்டுப் பாடினார். ஆனால், கையில் இருந்த ஒருசில நூறு ரூபாய் நோட்டுக்களை பறிகொடுத்து, நாட்டு மக்கள்கண்ணீர் விட்டு அழுதனர். இந்நிலையில்,2047-ஆம் ஆண்டில் நாட்டின் 100-வதுசுதந்திர தினத்தின்போது, ‘புதிய இந்தியாபிறக்கும்’ என்று கூறி, குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவும் தன் பங்கிற்கு பயமுறுத்தியுள்ளார்.

                                       ****************

கர்மாவிலிருந்து  யாரும் தப்ப முடியாது!

ரூ.58 ஆயிரம் கோடிரபேல் ஒப்பந்தத்தில், ஊழல் நடந்திருப்பதாக வலுவான குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. எனினும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு மூலம்மோடி அரசு தப்பித்தது.இதனிடையே, ரபேல் விவகாரத்தில் இந்திய இடைத்தரகர் ஒருவருக்கு, ரூ. 8 கோடியே 62 லட்சம் லஞ்சம் கைமாறியது மீண்டும் விவாதங்களை கிளப்பியுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டிராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள் ளார். அதில், ‘கர்மா என்பது ஒருவரின் செயல்கள் பதிவாகும் பேரேடு. யாரும் அதிலிருந்து தப்ப முடியாது!’ என்று குறிப்பிட்டுள்ளார்.

                                       ****************

10 இடங்கள் உறுதியாம்...நளின் குமார் நம்பிக்கை

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜககுறைந்தது 10 இடங்களையாவது கைப்பற்றும் என கர்நாடகத் தைச் சேர்ந்த பாஜகஎம்.பி.யும், கேரளத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டவருமான நளின் குமார் கட்டீல் தெரிவித்துள்ளார். கேரள பாஜக தலைவர் கே. சுரேந்திரன் போட்டியிடும் மஞ் சேஸ்வர் தொகுதி, காசர்கோடு, நேமம் தொகுதி உட்பட 10 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று ‘நம்பிக்கை’ தெரிவித்துள்ளார்.

;