politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

பெட்ரோல், டீசல் விலை 3-வது நாளாக உயர்வு!

சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிந்து விட்ட நிலையில், செவ்வாய், புதன்கிழமைகளைத் தொடர்ந்து, வியாழனன்று தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் பெட்ரோல் - டீசல் விலையை மோடி அரசு உயர்த்தியுள்ளது. பெட்ரோல் விலையை லிட்டருக்கு 25 காசுகளும், டீசல் விலையை லிட்டருக்கு 30 காசுகளும் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வால் அதிகபட்சமாக மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 97 ரூபாய் 34 காசுகளாகவும், டீசல் விலை 88 ரூபாய் 49 காசுகளாகவும் உயர்ந்தது.

                                      ****************

இடைத்தேர்தல்கள் ஒத்திவைப்பு!

தாத்ரா- நாகர் ஹவேலி, காந்த்வா (ம.பி), மாண்டி (இமாச்சல்) ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளும், கல்கா, எல்லபாட் (ஹரியானா), வல்லவ் நகர் (ராஜஸ் தான்), சிந்த்கி (கா்நாடகம்), ராஜபாலா, மவ்ரிங்காங் (மேகாலயா), பதேபூா் (இமாச்சல்)பட்வேல் (ஆந்திரா) ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளும் காலியாக உள்ள நிலையில், இங்கு கொரோனா சூழல் காரணமாக தற்போதைக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என்று தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது.

                                      ****************

டுவிட்டர் நிறுவனத்தினர் வெள்ளைக்காரர்கள்...

டுவிட்டர் நிர்வாகம் எனது கணக்கை முடக்கியதன் மூலம்அவர்கள் அமெரிக்கர் கள் என்ற என் கருத்துஉறுதி செய்யப்பட்டுள் ளது. வெள்ளையர்கள் மற்றவர்களை அடிமைப்படுத்த உரிமை உண்டு என்று நினைக்கின்றனர். ஆனால், எனது கருத்தை வேறு தளங்கள் மூலமும், சினிமா மூலமும் கொண்டு செல்வேன் என்று பாஜக ஆதரவு பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் குறிப்பிட்டுள்ளார்.

                                      ****************

நீதிமன்றக் கண்டனத்தால் பீகாரில் பொதுமுடக்கம்

‘பீகார் மாநிலம் முழுவதும் முழுமையான பொதுமுடக்கம் கொண்டுவர வேண் டும். மாநில அரசு பொதுமுடக்கத்தை அறிவிக்காவிட்டால், நீதிமன்றம் தலையிட்டு அதற்குரிய உத்தரவுகளை வழங்கும்’ என்று பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்பு காட்டியிருந்தனர். இதையடுத்து, புதன்கிழமை இரவு முதல் 11 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அறிவித்து, முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

                                      ****************

மக்கள் வாழ்வாதாரத்தை பொதுமுடக்கம் பறிக்கிறது!

‘வார இறுதியில் பொதுமுடக்கம் அமல்படுத்துவது பற்றி அரசு சிந்திக்க வேண் டும்’ என்று தெலுங் கானா உயர் நீதிமன் றம் கூறியிருந்த நிலையில் ‘பொதுமுடக்கம் விதிப்பதால் கொரோனா எண்ணிக்கை குறைவாகும் என்பதில் எந்த உறுதியும் இல்லை. நிலைமை முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளது’ என்று தெலுங்கானா அரசின் தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் தெரிவித்துள்ளார். பொதுமுடக்கம் போன்றநடவடிக்கைகள் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

;