politics

img

தீக்கதிர் அரசியல் விரைவுச் செய்திகள்...

இஸ்லாமியர்களை ஏமாற்றும் மம்தா முயற்சி பலிக்காது“மேற்கு வங்கத் தில், திரிணாமுல் கட்சி கடைப்பிடிக்கும் கொள்கைகளே, பாஜக வளரக் காரணம். 2011-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் 10 ஆண்டுகளாக இங் குள்ள இஸ்லாமியர்களை

மம்தா ஏமாற்றிவருகிறார். அவருக்கு இம்முறை இஸ்லாமியர்களின் வாக்குகள் கிடைக்காது. இதைத் தெரிந்துகொண்டுதான், என்னைஅவதூறாக பேசிவருகிறார்” என இந்தியமதச்சார்பற்ற முன்னணியின் (ISF) தலைவர் அப்பாஸ் சித்திக் குற்றம் சாட்டியுள்ளார்.

                                           **************

வேட்பாளர்களை மிரட்டும் பாஜக மீது விசாரணை!

போடோலாந்து மக்கள் முன்னணியின் தாமல்பூர் தொகுதி வேட்பாளர் பாசுமாதரி, வாக்குப் பதிவுக்கு சிலமணி நேரங்களுக்கு முன்புபாஜகவில் சேர்ந்தார்.தேர்தல் செலவுக்கு பணம் தராததால் கட்சி மாறினேன் என்றுஅவர் கூறினார். இந்நிலையில், பாஜக-வின் மிரட்டல் காரணமாகவே பாசுமாதரி அந்தக் கட்சியில் சேர்ந்துள்ளார் என்றும்,இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கூறியுள்ளார். 

                                           **************

உ.பி.யில் கன்னியாஸ்திரிகள்  துன்புறுத்தல்: 2 பேர் கைது!

கேரளத்தைச் சேர்ந்த 2 கன்னியாஸ்திரிகள், கடந்த மார்ச் 19 அன்று உ.பி. மாநிலம் ஜான்சி ரயில் நிலையத் தில், ஏபிவிபி கும்பலால் துன்புறுத்தப் பட்டு, ரயிலிலிருந்து பாதி வழியிலேயே இறக்கி விடப்பட்டனர். இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், அப்படி ஒரு சம்பவம் நடக்கவேஇல்லை என்று பாஜக தலைவர்கள் மறுத்தனர். ஆனால், தற்போது அஞ்சல் அர்ஜாரியா, புருகேஷ் அம்ராயா ஆகிய2 ஏபிவிபி பேர்வழிகளை ரயில்வே காவல்துறை கைது செய்துள்ளது.

                                           **************

தில்லி, கர்நாடகத்தில் பொதுமுடக்கம் இல்லை

கொரோனா தொற்றுப்பரவலால் மகாராஷ்டிராவில் கடினமான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலைஉள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அதுதொடர்பான அறிவிப்புகள் வரும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். அதேநேரம் கர்நாடகத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்படாது என்று அம்மாநில தலைமை செயலாளர் ரவிக்குமார் கூறியுள்ளார். தில்லியில் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்த எந்த திட்டமும் இல்லை என்று அம்மாநில முதல்வர்அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

                                           **************

நான் பாஜகவின் உறுப்பினர் அல்ல!

‘‘பிரதமர் முதலில் அவரது உள்துறை அமைச்சரைக் கட்டுப் படுத்தட்டும். பின்னர் எனக்கு ஆலோசனை கூறலாம். மேலும், வேறுதொகுதியில் போட்டியிடப் போவது பற்றி, பிரதமரின் ஆலோசனையைக் கேட்க, நான் ஒன்றும் பாஜக உறுப்பினர் இல்லை.நந்திகிராமில் நிச்சயம் வெல்வேன். 200-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றுவேன்’’ என்று மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி ஆவேசம் அடைந்துள்ளார்.

;