politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் :- ஜெயலலிதாவின் ஆட்சி தொடர மக்கள் தீர்ப்பு.
ச.சா - இது நல்லாருக்கே.. நாடாளுமன்றத் தேர்தல்ல தோத்தது அவங்களாலனு சொல்லிரலாமே..!?
*****
செய்தி :- அருண் ஜெட்லிக்கு மீண்டும் அமைச்சரவையில் இடமில்லை.
ச சா - சம்பந்தமில்லாம அறிக்கை விடுற வேலை தருவாங்கள்ல..?!?
*****
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி :- திமுக வெற்றி உண்மையானது இல்லை.
ச சா - இப்புடியே பேசுங்க.. சட்டமன்றத் தேர்தல்லயும் அடி வாங்குன பிறகு உண்மை தெரியும்..!!!
*****
அமைச்சர் டி.ஜெயக்குமார் :- இது எங்களுக்குக் கிடைத்த பெரிய வெற்றியாகத்தான் கருதுகிறோம்.
ச.சா - ஒரு சீட்ல மட்டும் ஜெயிச்சதையா..?!?

;