politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி :- அபிஜித் பானர்ஜி சாதனையில் இந்தியா பெருமை கொள்கிறது.
ச.சா - அப்புறம் எதுக்கு கட்சிக்காரங்கள விட்டு வசை பாடுறீங்க..??
 

தமிழக அமைச்சர் டி.ஜெயக்குமார் :- ஏழு பேர் விடுதலையில் அதிகாரப்பூர்வ கடிதம் ஆளுநரிடமிருந்து வராததால், அது பற்றி விவாதிப்பது தேவையற்றது.
ச.சா - என்ன ஆச்சுனு கேக்கலாமே..??
 

தேசிய குற்ற ஆவண காப்பகம் :- நாட்டிலேயே அதிக குற்றங்கள் நடக்கும் மாநிலம் உத்தரப்பிரதேசம்.
ச.சா - மோசமான எல்லா விஷயத்துலயும் பாஜக ஆளுற மாநிலங்கள்தான் முன்னணி..!!
 

அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஆலிஸ் வெல்ஸ் :- பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு தருகிறது.

ச.சா - இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தருதே..??

;