politics

img

தீக்கதிர் அரசியல் விரைவுச் செய்திகள்...

மேற்குவங்கத்தில் சிபிஎம் தலைவர் மீது தாக்குதல்!

மேற்கு வங்க மாநிலத்தில், முதற்கட்டத் தேர்தல் அறிவிக்கப் பட்டிருந்த 30 தொகுதிகளுக்கு, கடந்த சனிக் கிழமையன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுஷாந்தா கோஷ் (தற்போதைய சல்போனி தொகுதி வேட்பாளர்) மீது திரிணாமுல் கட்சியினர் தாக்குதல்நடத்தியுள்ளனர். இதையடுத்து சுஷாந்தாகோஷூக்கு தற்போது போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

                                 *************

அமலாக்கத்துறை மீது வழக்கு ராஜ்நாத் சிங் புலம்பல்!

“தங்கக் கடத்தல் வழக்கை விசாரித்து வரும் அமலாக்கப் பிரிவுஅதிகாரிகள் மீது கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள் ளது. இது உண்மையில் மிகவும் துரதிர்ஷ்டமானது. கேரள அரசு இந்தச்செயல் மூலம் நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்குச் சவால் விடுகிறது. கேரள அரசின் செயல் 100 சதவிகிதம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது” என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புலம்பியுள்ளார்.

                                 *************

எதையும் வெளிப்படையாக சொல்ல வேண்டியதில்லை

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அதானியின் விருந்தினர் மாளிகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, சந்திப்பு நடந்தது; அல்லது நடக்கவில்லை என உறுதியான பதில்எதையும் கூறாத அமித்ஷா, ‘‘அனைத் தையும் வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியமில்லை’’ என பதிலளித்துள்ளார்.

                                 *************

சிபிஎம் தலைவர் கொலை வழக்கில் மம்தா கட்சி பிரமுகர் கைது

மேற்கு வங்கத்தில் சிபிஎம் தலைவர்களில் ஒருவரான பிரபீர் மகதோ, கடந்த 2009-ஆம் ஆண்டு ஜங்கல்மஹால் பகுதியிலுள்ள லால்கரில் படுகொலை செய்யப்பட்டார். இந்தவழக்கில், மாவோயிஸ்ட் ஆதரவு அமைப்பின் நிர்வாகியும், ஆளும் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்தவருமான சத்ரதார் மகதோவை தேசியப் புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில்ஆஜராகாத நிலையில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள் ளது.

                                 *************

ஜர்கிஹோலியை கைது   செய்யக் கோரி போராட்டம்

அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி, இளம்பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உள் ளாக்கியது தொடர் பாக, பாஜகவைச் சேர்ந்த கர்நாடக முன் னாள் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ஜர்கிஹோலி மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு செய்துள்ளனர். எனினும்அவரை இன்னும் கைது செய்யவில்லை. இந்நிலையில், ஜர்கிஹோலியை உடனடியாக கைது செய்யக் கோரி கப்பன்பார்க் காவல் நிலையத்தை காங்கிரசார் முற்றுகையிட்டனர்.

;