politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு நவம்பரில் 2.74 கோடி இருந்தது. டிசம்பரில் 3.87 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரே மாதத்தில் 1.13 கோடி உயர்வு. கோவிட் பெருந்தொற்றுக்கு முன்பே  கூட இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருந்தது.இன்னும் இந்த கொடுமை உயர்ந்த வண்ணம் உள்ளது. மோடி ஜி அவர்களே எங்கே வேலைவாய்ப்புகள்? கூட்டுக் களவாணி முதலாளிகள் மட்டும்தான் பயன் பெற வேண்டுமா? இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்னும் ஆடம்பர அறிவிப்பை எவரும்இன்னும் மறக்கவில்லை.

                                               *******************   

2014ஆம் ஆண்டு 414 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் இன்று இரண்டு மடங்குக்கு அதிகமாக அதிகரித்து 857 ரூபாய்க்கு எகிறியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் எரிவாயு சிலிண்டர் விலை 225 ரூபாய் அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது வெற்று விளம்பரங்களுக்கு செலவு செய்வதற்காக, படாடோபமாக தன்னை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வதற்காக மக்கள் மீது சுமையை ஏற்றி உறிஞ்சுகிறார். மேலும் மேலும் சுமைகளை மக்கள் மீது குரூரமான முறையில் ஏற்றுகிறார். சமையல் எரிவாயு விலை மூன்றே மாதங்களில் எப்படி உயர்ந்திருக்கிறது என்பதை பாருங்கள்:  

                                               *******************   

இந்திய பொருளாதாரம் 2020-21 நிதியாண்டின் இறுதி நிலவரங்களின் படி எட்டு சதவீதம் சுருங்கி பெரும் பின்னடைவில் முடியும் என்றுதேசிய புள்ளியியல் ஆய்வகத்தின் இரண்டாவது மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே 7.7 சதவீதம் சுருங்கியிருப்பதாக - அதாவது மைனஸ் விகிதத்தில் பொருளாதாரம் சென்று கொண்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது. 2021 ஜனவரி 29 கணக்கீட்டின்படி இப்படி கூறப்பட்டிருந்தது. ஒரே மாதத்தில் 2021 பிப்ரவரி 26 அன்று வெளியிடப்பட்டுள்ள புதிய மதிப்பீட்டில், பொருளாதாரம் இன்னும் வீழ்ச்சியடைந்து மைனஸ் 8 சதவீதம் அளவிற்கு சென்று விட்டதாக கூறப்பட்டுள்ளது. இதுதான் மோடியின் பொருளாதாரம். (மோடினாமிக்ஸ்). இதன் பொருள், பொருளாதாரத்திற்கு மேலும் பேரழிவு; பொதுமக்களுக்கு மேலும் பெரும் துயரங்கள்.  எதிர்வரும் சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவையும் அதன் கூட்டணியையும் வீழ்த்துவதே தீர்வுக்கான முதல்படி.

;