politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

தன்னை எதிர்ப்பவர்களை   மோடி அரசு நசுக்குகிறது!

“நாடு ஒரு முக்கியமான கட்டத்தை கடந்து செல்கிறது. முக்கியமான நிறுவனங்கள் கூட நெருக்கடியில் உள் ளன. இது நமது ஜனநாயகத்திற்கு மிகவும் கடுமையான அச்சுறுத்தலாகும். நமது விவசாயிகள் சாலைகளில் அமர்ந்து போராடுகிறார்கள். ஆனால் யாரும் கவலைப்படுவதில்லை. நீதித்துறை அமைப்புகள் கூட இப்போதுபலவீனமாகி விட்டன” என்று மம்தா கட்சியில் இணைந்துள்ள முன்னாள் பாஜகதலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித் துள்ளார். தன்னை எதிர்ப்பவர்களை நசுக்குவதையே மோடி அரசு நம்புகிறதுஎன்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

                               *************

வெளியே நிறுத்தப்பட்ட ‘ஜி-23’ தலைவர்கள்..!

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக் காக 30 பேர் கொண்டநட்சத்திர பேச்சாளர் கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்துள் ளது. சோனியா காந்தி,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் உள்ளிட்டோர் பட்டியலில்இடம்பெற்றுள்ளனர். அதேநேரம், ‘ஜி23’தலைவர்கள் என்று அழைக்கப்படும் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில்சிபல், பூபேந்திர சிங் ஹூடா, மணீஷ் திவாரி உள்ளிட்ட தலைவர்களின் பெயர்கள் இடம்பெறவி ல்லை.

                               *************

ஆர்எஸ்எஸ்-ஸின் சர்வாதிகார சங்கிலிக்குள் இந்தியா!

“காந்தியின் தண்டி யாத்திரை, ஒட்டுமொத்த உலகத்துக் கும் விடுதலை தொடர் பான துணிவான செய் தியை அளிக்கிறது. ஆனால், ஆர்எஸ்எஸ் தலைமையிலான சர் வாதிகார சக்திகளின் சங்கிலிகளால் இந்தியா இன்று கட்டிப் போட்டுள்ளது” என்றுகாங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும், தற்போதைய சூழலில்,நாட்டின் விடுதலைக்கு நாம் மீண்டும் உறுதியேற்க வேண்டும். அதற்கு மகாத்மா காந்தியை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு சுதந்திரத்துக்கான யாத்திரையை தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

                               *************

உத்தரகண்ட் பாஜக  தலைவரும் மாற்றம்!

உத்தரகண்ட் மாநில பாஜக முதல் வர் திரிவேந்திர சிங் ராவத், அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். தீரத்சிங் ராவத் புதிய முதல்வராக பதவியேற்றார். தங்களது ஆட்சியில் நடந்த ஊழல்முறைகேடுகளை திசைத் திருப்புவதற் காகவே பாஜக இந்த ஆள்மாற்ற வேலையை அரங்கேற்றியதாக குற்றச்சாட்டுக் கள் எழுந்தது. இதனிடையே, உத்தரகண்ட் மாநில பாஜக தலைவர் பன்சிதர்பகத்தும் மாற்றப்பட்டுள்ளார். புதியதலைவராக மதன் கவுசிக் நியமிக்கப் பட்டுள்ளார்.

                               *************

25 ஆண்டுகளுக்கு பின் பெண் வேட்பாளர்..!

கேரளத்தில், காங்கிரஸ்  கூட்டணியில்27 தொகுதிகளில் போட்டியிடும் இந்தியயூனியன் முஸ்லிம் லீக் கட்சி, கடந்த 1996-ஆம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக தற்போதுதான் நூர்பினா ரஷீத் என்ற பெண் வேட்பாளர் ஒருவருக்கு வாய்ப்புஅளித்துள்ளது.

;