politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

கல்விக்கு செலவிடப்படும் நிதி தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நமது குழந்தைகளுக்கு கல்வி புகட்டப்படுவது குறைந்தால், அது மூடநம்பிக்கைகள்/அறிவியலுக்கு புறம்பான கண்ணோட்டங்கள்/பிற்போக்குத்தனம் ஆகியவை உருவாக காரணமாக அமைகிறது.  வெறுப்பும் வன்முறையும் மூலமாக மதப் பிளவுகளை கூர்மைப்படுத்துகிறது. அறிவியல்/ பகுத்தறிவுக்கு எதிரான இந்த தாக்குதல் முறியடிக்கப்பட வேண்டும். கல்விக்கு ஜி.டி.பி.யில் 6% செலவழியுங்கள்.

                                            *****************

பல நகரங்களில் பெட்ரோல் ரூ.100ஐ தாண்டிவிட்டது. டீசலும் 100க்கு நெருங்குகிறது. இது கிரிமினல் குற்றம். கூட்டுக் களவாணிகளின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்வதால் இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பை ஈடுசெய்ய  பெட்ரோல் விலை உயர்வு மூலம் மக்களை கொள்ளை அடிப்பதை நிறுத்த வேண்டும். பெட்ரோல் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் செங்குத்தாக உயர்கிறது. இது பொருளாதார மந்தத்தை ஆழப்படுத்துகிறது. மக்களின் வாழ்வில் துன்பங்களை சுமத்துகிறது. பெட்ரோலியப் பொருட்களின் மீது உள்ள அனைத்து சுங்கவரிகளையும் ரத்து செய்யுங்கள்.

                                            *****************

கோவிட் முதல் அலையிலேயே உத்தரப்பிரதேச பல மாவட்டங்களில் மரணங்கள் மிகப்பெரிய அளவுக்கு மறைக்கப்பட்டுள்ளன என்பது தகவல் அறியும் சட்டம் மூலமாக தெரிய வந்துள்ளது. சுய ஏமாற்று என்பது சுய தோல்வி பிரதமர் அவர்களே! மருத்துவ பேரழிவின் ஆழமான விளைவுகளை தயவு செய்து உணருங்கள். பெருந்தொற்றை எதிர்கொள்வதில் மக்களுக்கு உதவுவதற்கு பதிலாக பொய் பிரச்சாரம்/தற்பெருமை பிம்பம் கட்டமைத்தல்/வாய்ப்பந்தல் ஆகியவற்றில்தான் நீங்கள் கவனம் செலுத்தி வந்துள்ளீர்கள். மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி/இலவச உணவு தானியங்கள்/நேரடி நிதி தாருங்கள்.

                                            *****************

அரசுத்துறையில் இருக்கும் பாதுகாப்பு தளவாட ஆலைகளை கார்ப்பரேட்டுகளாக மாற்றுவதை கண்டித்து 41 ஆலைகளின் ஊழியர்கள் வேலை நிறுத்தம். பிரதமர் மோடி அவர்களே! தொழிலாளி வர்க்கத்தின் கோபத்தைஉணருங்கள். மக்களின் செல்வத்தையும் தேசத்தின் வளங்களையும் கார்ப்பரேட்டுகள் பகற் கொள்ளை அடிக்க வழிவகுப்பதை நிறுத்துங்கள்.

                                            *****************

மருத்துவ கட்டமைப்புகள் /ஆக்சிஜன்/மருந்துகள்/இலவச சிகிச்சை/தடுப்பூசிகள் அதிகப்படுத்துவதற்கு பதிலாக உயிரழப்புகள் குறித்து உண்மைகளை சொல்லும் ஊடகங்களை கட்டுப்படுத்துதல் என்பதுதான் ஒன்றிய அரசின் முன்னுரிமையாக இருக்கிறது. வெட்கக்கேடு.

                                            *****************

18-44  வயது பிரிவினருக்கு இலவச தடுப்பூசி தொடங்கியஜூன் 21 அன்று அனைத்து ஐ.ஐ.டி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் பிரதமருக்கு நன்றி தெரிவித்து பேனர்கள் வைக்க வேண்டும் என பல்கலைக்கழகமானியக்குழு ஆணை பிறப்பித்துள்ளது. இதுஅருவருப்பானது. எல்லையே இல்லாத வெத்து வேட்டு சுய விளம்பரம். இந்தியாவின் தடுப்பூசி திட்டங்கள் என்றைக்குமே இலவசமாகவே இருந்து வந்துள்ளன. அதில் பாரபட்சத்தை புகுத்தியது மோடி அரசாங்கம்தான். இந்த மோசமான பாரபட்சம் திரும்பப் பெறப்பட்டது. கடுமையான விமர்சனங்கள் காரணமாக! இதனை புகழ வற்புறுத்தி ஆணை! மிக மோசமான இந்த ஆணையை உடனடியாக திரும்பப் பெறுங்கள்.

                                            *****************

தினசரி அத்தியாவசியப் பொருட்களின் விலை 40% உயர்ந்துவிட்டது. பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு அனைத்து பொருட்களின் விலையையும் செங்குத்தாகஉயர்த்திக் கொண்டுள்ளது. பெருந்தொற்றை எதிர்கொண்ட தில் மக்கள் தமது வாழ்நாள் சேமிப்பை முழுவதுமாக செலவழிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இப்பொழுது பணவீக்கமும் விலைவாசி உயர்வும் மக்களின் வாழ்வை மேலும் அலைக்கழிக்கின்றன. ஏழை மக்களுக்கு நேரடி நிதி உதவியும் இலவச உணவுதானியங்களும் உடனடியாக தாருங்கள் பிரதமர் அவர்களே!

                                            *****************

இரட்டை நாக்கின் உச்சபட்ச பொய்யுரை. ஜி7 நாடுகள் கூட்டத்தில் விருந்தினர் அந்தஸ்தில் கலந்து கொண்ட நான்கு நாடுகளில் ஒன்றான இந்தியா சார்பாக பேசிய மோடி ஜனநாயகம்/பேச்சு-எழுத்து சுதந்தரம்/டிஜிட்டல் உரிமைகளை உயர்த்திபிடிக்க வேண்டும் என பேசியுள்ளார். ஆனால் அதே மோடி அரசாங்கம்தான் இந்த உரிமைகள் அனைத்தை யும் இந்தியாவில் காலில் போட்டு மிதிக்கிறது. எலும்பில்லாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் சுழலும்.

                                            *****************

22.06.2021 அன்று ஒரே நாளில் சுமார் 86 லட்சம் தடுப்பூசிகள் போட்டுள்ளதாக பிரதமரும் மற்றவர்களும் புளங்காகிதம் அடைகின்றனர். நல்லது. ஆனால் 86 லட்சம் எனும் எண்ணிக்கைக்காக சில திரைமறைவு தகிடுதத்தங்கள் நடந்ததாக செய்திகள் வருகின்றன. மத்திய பிரதேசத்தில் 22ம் தேதி அதிகபட்சமாக 16.9 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன. ஆனால் 21ம் தேதி வெறும் 692 தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டன. 23ம் தேதி வெறும் 4718 மட்டுமே போடப்பட்டன. இப்படி பல பா.ஜ.க. மாநிலங்களில் நடந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் மோடியின் பிம்பத்தை கட்டியமைக்க ஒரே நாளில் 86 லட்சம் தடுப்பூசிகள் என்பது உலக சாதனை என சுகாதார அமைச்சர் கூறுகிறார். ஆனால் நமது அண்டை நாடு ஒன்று ஒரே நாளில் 2 கோடி தடுப்பூசி கள் போட்டுள்ளது. வெட்கக்கேடான பொய்கள்.80 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (ஜூன் 24) ஹிட்லர் படைகள் போர் மறுப்பு ஒப்பந்தத்தையும் மீறி சோவியத் யூனியன் மீது தாக்குதல் தொடுத்தன. செஞ்சேனை மற்றும் சோவியத் மக்களுக்கு தைரியமும் உற்சாகமும் நம்பிக்கையும் கொடுத்து ஸ்டாலின் பேசினார்: “சோசலிச சோவியத்தை அழித்தொழிக்க ஹிட்லர் நம் மீது போரை கட்டவிழ்த்துள்ளார். அந்த அழிவுக்காரனையும் அவரது தத்துவத்தையும் அழித்தொழியுங்கள்” என்றார். 4 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனி நாடாளுமன்றத்தின் மீது செங்கொடி! ஹிட்லர் தற்கொலை!பாசிசம் தோல்வி. அந்த பாசிச சக்திகளின் இன்றைய நவீன வடிவங்களையும் உருமாறிகளையும் தோற்கடிப்போம்.

                                            *****************

பொய்யான மோடி அலையை உருவாக்க பகீரத முயற்சி. ஜுன்19ல் 41.8 லட்சம் தடுப்பூசிகள்; 20ம் தேதி 4.3 லட்சமாக சரிவு. 21ம் தேதி 90.8 லட்சம்; 22ம் தேதி 54 லட்சமாக சரிவு. இத்தகைய பொய் பிம்பம் கட்டமைப்பது 3வதுஅலையிலிருந்து நம்மை பாதுகாக்க இயலாது. கொள்முதல் களை அதிகப்படுத்துங்கள். வீடு வீடாக தடுப்பூசிபோடுங்கள்.

                                            *****************

என்னே வீழ்ச்சி! உலகின் வேகமாக நடைபோடும் வளரும் நட்டின் பொருளாதாரம் என்பதிலிருந்து வேகமாக சரியும் பொருளாதாரமாக நமது தேசத்தின் வளர்ச்சி மாறியுள்ளது. வறுமை செங்குத்தாக உயர்வு. நமது பொருளாதாரத்தில் மீதம் உள்ளதும் அழிக்கப்பட்டு வருகிறது. இந்த அழிவிலிருந்து  மீள்வதற்கு மோடியை நிர்ப்பந்திக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

                                            *****************

ஆழமாகிவரும் மனித நெருக்கடி: 

  92% பேர் ஊரடங்கின் பொழுது எந்த ஊதியம்  அல்லது நிவாரணமும் பெறவில்லை.

  91% பேர் வேலையை இழந்துள்ளனர்.

 மே 31 தேதியில் 74% பேர் தங்கள் கையில்  ரூ.200க்கும் குறைவாகவே பணம் வைத்திருந்தனர்.

பிரதமர் மோடி அவர்களே! வேலை இழந்தவர்களுக்கு மாதம் ரூ.6000 தாருங்கள். கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை விரிவாக்குங்கள். நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை உருவாக்குங்கள். தேவைப்படுவோர் அனைவருக்கும் இலவச உணவு தானியங்கள் தாருங்கள்.

                                            *****************

பல்லாயிரக்கணக்கான கட்டிட தொழிலாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. கட்டிட தொழிலாளர்களின் சம்மேளனம் முன்வைக்கும் ஆலோசனைகளை செவிமடுங்கள் பிரதமர் மோடி அவர்களே! இவர்கள்தான் இந்தியாவின் உள்கட்டமைப்புகளை உருவாக்கும் சிற்பிகள்.  உங்கள் கூட்டுக் களவாணிகளின் சொத்தும் உங்கள் கட்சியின் அரசியல் நிதியும் இப்படிப்பட்ட தொழிலாளர்களின் வியர்வையிலிருந்துதான் களவாடப்படுகிறது.

                                            *****************

உண்மை விவரங்கள் பெரிய அளவுக்கு மறைக்கப்பட்ட நிலையிலும் கூட இந்தியாவில் பெருந்தொற்று 3 கோடியை கடந்து விட்டது; உயிரிழப்புகள் 4 லட்சத்துக்கும் மேல். ஒவ்வொரு மாநிலத்திலும் குறைத்து மதிப்பிடப்பட்ட விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன. உயிரிழந்த வர்களின் குடும்பங்களுக்கு ஈட்டுதவி செய்யுங்கள். தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்துங்கள்.

                                            *****************

மருத்துவ செலவுகளுக்கான பணவீக்கம் கடும் உயர்வு. மருந்துகள்/பரிசோதனைகள்/ சிகிச்சை கட்டணம் என அனைத்தும் உயர்ந்துள்ளன. பெருந்தொற்று காலத்தில் இப்படி பணம் கொள்ளை அடிப்பது கிரிமினல் குற்றம். பல தேசங்களில் செயல்படுத்தியிருப்பது போல இந்தியாவிலும் கோவிட் சிகிச்சைகள் கட்டணமின்றி தரப்பட வேண்டும். இப்பொழுதாவது இதனை செய்யுங்கள் பிரதமர் மோடி அவர்களே!

                                            *****************

உ.பி.யில் கங்கையில் தண்ணீர் அளவு அதிகரிப்பதன் விளைவாக இரண்டாவது அலையில் போடப்பட்ட உடல்கள் மீண்டும் மேலே வருகின்றன என தொலைக் காட்சிகள் தெரிவிக்கின்றன. பெருந்தொற்றை மின்னல் வேகத்தில் கட்டுப்படுத்திவிட்டதாக உ.பி.முதல்வர் கூறுகிறார். இந்த சுய தம்பட்டத்தில் மற்றும் சுயவிளம்பரத்தில் அவர்பிரதமருடன் போட்டி போடுகிறார். ஆனால் மக்கள் பட்ட துன்பங்களின் உலுக்கும் உண்மைகள் கங்கையில் மேலே வருகின்றன.

                                            *****************

சமையல் எண்ணெய் விலைகள் செங்குத்தாக உயர்வு. தினசரி உயரும் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக மற்ற பொருட்களின் விலையும் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து வருகின்றன. இப்பொழுது சமையல் எண்ணெய் உட்பட தினசரி பயன்படுத்தும் பொருட்களின் விலை எட்டாத உயரத்துக்கு பயணிக்கின்றன. விலைவாசியை கட்டுப்படுத்துங்கள். மக்கள் உயிர்வாழ நேரடி நிதி தாருங்கள் பிரதமர்மோடி அவர்களே!

                                            *****************

உலகம் முழுமைக்கான செல்வம் 2020ல் 7.4% உயர்கிறது. ஆனால் இந்தியாவின் செல்வம் 4.4% சரிகிறது. இது இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சி மட்டுமல்ல; மக்களின் வாழ்வாதரமும் கடும் சிதைவுக்கு ஆளாகிறது. மக்கள் உயிர்வாழ நேரடி நிதி உதவியும் இலவச உணவு தானியங்களையும் தாருங்கள்.

;