politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

2014ம் ஆண்டிலிருந்து வங்கிகள் ரூ8.07 லட்சம் கோடி வாராக் கடனை மோடி அரசின் கூட்டு கொள்ளை களவாணிகளுக்கு தள்ளுபடி செய்துள்ளன. மோடி அரசாங்கம் மக்களின் வாழ்நாள் சேமிப்பையும் செல்வத்தையும் கொள்ளை அடித்த மிகப்பெரிய தொகை. இது போதாதென்று மேலும் பொதுத்துறை வங்கிகளில் ரூ.3.37 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது வரி செலுத்தும் பொது மக்களின் பணம். இந்த நிதியையும் கடன்வாங்கி திருப்பித் தராமல் இருப்பதை அரசாங்கம் தடுக்கவில்லையெனில் கூட்டு கொள்ளை களவாணிகள் மீண்டும் மக்கள் பணத்தை சூறையாடுவார்கள்.

                             ***********

கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்ள மக்கள் தமது சேமிப்பு/ கடன்/அடகு வைத்தல் ஆகியவை மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தனர். ஆனால் மோடி அரசாங்கம் செலவழித்தது இதைவிட குறைவு. காப்பீடு உட்பட சுகாதார பாதுகாப்பு முழுவதுக்கும் அரசின் செலவு 21 ஆயிரம் கோடி மட்டுமே!  மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லாத கொடுமை! 

                             ***********

மோடி அரசின் ஒரே பதில்- ‘‘எங்களிடம் தரவுகள்  இல்லை’’ உண்மையை மறுப்பதையே தொழிலாக தேர்வு செய்துகொண்ட கொடுமை!

                             ***********

பெகாசஸ் குறித்து தகவல் தொழில்நுட்ப அமைச்சரின் பதில் இடியாப்ப சிக்கல் போல உள்ளது. பல அம்சங்களை மறைக்க முயற்சி என்பது தெளிவு.  பெகாசஸ் வேவு மென் பொருளை இந்திய அரசு வாங்கவில்லை என்பதை பகிரங்கமாக  அமைச்சரின் அறிக்கை கூற இயலவில்லை.  என்ன நடந்தது என்பதை மோடி அரசாங்கம் மக்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும்.

                             ***********

இந்துஸ்தான் டைம்ஸ்: பல இடங்களில் தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி செலுத்துவது நிறுத்தம்.மோடி அரசாங்கம் ஆபத்தான மூன்றாவது அலையை வெற்றிலைபாக்கு வைத்து அழைப்பது போல தோன்றுகிறது. உலகமெங்கும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்யுங்கள். அனைவருக்கும் இலவசமாக வீடுவீடாக தடுப்பூசிகளை செலுத்துங்கள். இதனை உடனே செயலாற்றுங்கள்.

                             ***********

ஏமாற்று அரசாங்கம்! மோடி அரசாங்கம் பொய் பிம்பத்தை கட்டமைப்பதிலும் வாய்ப்பந்தலிலும் ஈடுபடுகிறது. உண்மை தரவுகள் மறைக்கப்படுவதால் பெருந்தொற்றையும் வாழ்வாதார இழப்பையும் எதிர்கொள்வதில் மக்கள் நிராயுதபாணிகளாக ஆக்கப்படுகின்றனர். இந்த உண்மையை அம்பலப்படுத்துவோர் பயமுறுத்தப்படுகின்றனர்/துன்பப்படுத்தப்படுகின்றனர்/ கைது செய்யப்படுகின்றனர்.

                             ***********

தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்துக்கு 2016-17ல் ரூ.33 கோடி ஒதுக்கீடு. ஆனால், 2017-18ல் ரூ.333 கோடி அதாவது 10 மடங்கு உயர்வு. இந்த காலத்தில்தான் மோடி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூவுடன் மத்திய தரை கடலோரத்தில் கால்களை நனைத்துக் கொண்டிருந்தார். இந்தியர்களின் அலைபேசிகளை ஊடுருவ பெகாசஸ் வேவு மென்பொருள் பேரம் பேசப்பட்டதா? கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணை அவசியம். 

                             ***********

தடுப்பூசிகளுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் மூன்றில் ஒரு பங்குதான் செலவிடப்பட்டுள்ளது. டிசம்பருக்குள் 18 வயதுடைய அனைவருக்கும் தடுப்பூசிகள் போட 180 முதல் 200 கோடி தடுப்பூசிகளுக்கு கொள்முதல் ஆணை பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால் ஜூலை வரை 100 கோடிகளுக்குதான் கொள்முதல் ஆணை அனுப்பப்பட்டுள்ளது. தேவை எனில் கூடுதல் நிதி தடுப்பூசிகளுக்கு செலவிடப்படும் என வாக்குறுதி தரப்பட்டது. எங்கே அந்த நிதி? உடனடியாக கொள்முதல் செய்து தடுப்பூசிகளை அனைவருக்கும் செயல்படுத்துங்கள் இப்பொழுதே செயல்படுத்துங்கள்.

;