politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித்சிங் :- இந்தியா-அமெரிக்கா உறவு முன்னேற்றமடைந்து வருகிறது.
ச.சா - வர்த்தக முன்னுரிமைப் பட்டியல்ல இருந்து இந்தியாவத் தூக்கிருக்காங்களே.. அதச் சொல்றாரா..??
 

செய்தி :- நாட்டின் ஏற்றுமதி 1.66 சதவிகிதம் குறைந்தது.
ச.சா - இவங்கதான் மதரீதியா குடியுரிமையப் புடுங்குறதுல குறியா இருக்காங்களே..??
 

அமெரிக்க செனட் அவை தீர்மானம் :- ஈரான் மீது தாக்குதல் நடத்துவதாக இருந்தால் அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை டிரம்ப் பெற வேண்டும்.
ச.சா - புலி வாலப் பிடிச்ச கதைதான்...
 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் :- நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக, பட்ஜெட்டில் அறிவிக்காததையும், மத்திய அரசு செய்யும்.
ச.சா - பொருளாதாரத்த நாசப்படுத்துற வேலையத்தான சொல்றீங்க..??

;