politics

மேற்குவங்கத்தில் 630 வாக்குச்சாவடிகளில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்

புதுதில்லி, மே 18-மேற்கு வங்கத்தில் மொத்தம் 630 வாக்குச் சாவடிகளில் மீண்டும் தேர்தல்நடத்திட வேண்டும் என்று வலியுறுத்தி,தலைமைத் தேர்தல் ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஹன்னன்முல்லாவும் சந்தித்து கடிதம் அளித்தனர்.மேற்கு வங்கத்தில் நடந்துள்ள மற்றும் ஞாயிறு அன்று நடக்கவுள்ள தேர்தல்தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையரிடம் சீத்தாராம் யெச்சூரி கடிதம் அளித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்திலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவேட்பாளர்கள் டாக்டர் ஃபாட் ஹலீம்,தெற்கு 24 பர்கானா மாவட்டச் செயலாளர்சமிக் லகிரி மற்றும் தேர்தல் முகவர்பிகாஷ்ரஞ்சன் பட்டாச்சார்யா, ஜாதவ்பூர் தொகுதி வேட்பாளர் முதலானவர்கள் அனுப்பியிருந்த கடிதங்களைத் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அவர்கள் அளித்துள்ளனர். அவர்கள்அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:மேற்கு வங்கத்தில் தம்லுக் தொகுதியில் 298 வாக்குச் சாவடிகள் உட்பட630 வாக்குச் சாவடிகளில் மீண்டும்வாக்குப்பதிவு நடத்திட வேண்டும் என்றுசிபிஎம் கட்சியின் சார்பில் கோரியிருந்தோம். இவ்வாக்குச்சாவடிகளில் பல்வகையான தில்லுமுல்லு நடவடிக்கைகள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக இங்கே மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். மாநிலத் தேர்தல் ஆணையம் இவற்றின்மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுத்திடவில்லை. இவ்வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்திட உடனடியாக உத்தரவிட வேண்டும்.மத்திய துணை ராணுவப் படையினர் மாநிலத்தில் இருத்தி வைக்கப் பட்டுள்ள போதிலும், தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தக் கூடிய விதத்திலும், மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய விதத்திலும் அவர்களின் வேலைகள் நிர்ணயிக்கப்படவில்லை. தேர்தல் ஆணையம்அறிவித்ததைப்போல அவற்றின் பேரணி அணிவகுப்புகள் நடத்தப்படவில்லை. இவற்றைச் சரிசெய்திட வேண்டும்.தேர்தல் ஆணையம் நியமித்திருந்த பார்வையாளர்களின் செயல்பாடுகள் என்பவையும் மிகவும் அரிதாகத் தான் இருக்கின்றன. தேர்தல் சம்பந்தமாக முறையீடுகளையும், ஒழுங்கீனங்களையும் பெற்றுக்கொண்டு, உடனடியாக தலையிடக்கூடிய விதத்தில் இவர்கள் எப்போதும் தயார் நிலையில் இருந்திட வேண்டும்.இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி தலைமைத் தேர்தல் ஆணையரிடம் கோரியுள்ளார்.        (ந.நி.)

;